உண்மையான சமதர்மவாதிகள் சமதர்மத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்களேயானால், அவர்கள் சம தர்மம் என்கிறதை மாற்றிக் கொண்டு, பொது உடைமைத் தத்துவத்தை இலட்சியமாக்கிக் கொண்டு முயற்சித்தால் பலன் ஏற்படலாம் என்று கருதுகிறேன். ‘பொது உடைமை’ என்பது பகுத்தறிவின் எல்லையாகும்.
(‘விடுதலை’ 24.4.1967)