கல்வியில் தகுதி – திறமை என்பதில், முதலில் கல்வி நம் மக்களுக்கு எதற்கெதற்காக வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா? பிறகு கல்வி எதற்கு வேண்டுமோ அதற்கு இப்போதிருக்கும் கல்வியில் உரிய தகுதி – திறமை போதுமா, போதாதா என்பதைப் பார்க்க வேண்டாமா? இந்த இரண்டிலும் விசயம் தெரிந்து கொள்ளாத, ஒரு முடிவுக்கு வராத மக்கள் கல்வியில் தகுதி – திறமை பேசுவது முட்டடாள்தனம் அல்லது அயோக்கித்தனமன்றி ஆய்ந்தறிந்து கூறும் அறிவுத்தன்மையுடையதாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1679)

Leave a Comment