சென்னை, ஜூன் 22 – தமிழ்நாட்டில் இரவில் தனியாக பயணிக்க நேரிடும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க, காவல்துறை புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
பெண்கள் தனியாக பயணிப்பது என்பது, பல தரு ணங்களில் பகல் வேளையிலேயே சவாலாக நிலவுகிறது. இந்த நிலையில் இரவில் பெண்கள் தனியாக பயணிப்பது என்பது பலருக்கும் அச்சத்துக்கு உரிய தாகவே நீடிக் கிறது. இதனை மாற்றும் வகையில், இரவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு உதவுவதற்கான புதிய திட்டத்தை தமிழ்நாடு காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் தனியாக பயணிக்க வேண்டிய சூழல் எழுந் தால், அவர்கள் காவல்துறை உதவியை நாடலாம். இதற் கான உதவி எண்களை அழைத்து விவரம் தெரிவித்தால், காவல்துறை சார்பில் அருகிலுள்ள ரோந்து வாகனம் பெண்கள் குறிப்பிடும் இடத்துக்கு விரைந்து வரும்.
பெண்களின் இரவு நேர தனித்த பயணத்தில், இந்த ரோந்து வாகனம் பாதுகாப்பாக உடன் செல்லும். வாரத்தின் அனைத்து நாட்களிலும், இரவு பயணத்துக்கு பெண்கள் இந்த இலவச உதவியை கேட்டுப் பெறலாம்.
தமிழ்நாடு காவல்துறையின் பெண்களுக்கான இந்த பிரத்யேக உதவியைப் பெறுவதற்கு, வழக்கமான 112, 1091 ஆகிய கட்டணமற்ற எண்களை தொடர்புகொள்ளலாம். இது தவிர 044-23452365, 044- 28447701 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.