வங்கி நிதியில் வேலை வாய்ப்புக்கான தொழில் நுட்பத் திறன் விரிவாக்கத் திட்டம்

1 Min Read

 சென்னை, ஜூன் 22 – இங்கிலாந்தின் மிகப்பெரிய நிதியில் சேவைகள் வழங்கி வரும் குழுமங்களில் ஒன்றாகிய லாயிட்ஸ் பேங்கிங் குழுமம், இந்தியாவின் அய்தராபாத்தில் உள்ள நாலெட்ஜ் சிட்டி மாவட்டத்தில் ஒரு புதிய தொழில்நுட்ப மய்யத்தில் முதலீடு செய்வதற்கான முடிவை அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் மிகப்பெரிய டிஜிட்டல் வங்கி சேவையை வழங்கி, 20 மில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் வழி செயல்படும் பயனர்களைக் கொண்ட இந்தக் குழுமம், இந்த ஆண்டின் இறுதியில் ஒரு புதிய தொழில் நுட்ப மய்யத்தைத் தொடங்கி தன் டிஜிட்டல் திறனை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

இது துவக்கத்தில் தொழில்நுட்பம், டேட்டா மற்றும் இணையப் பாதுகாப்பு சார்ந்த பொறுப்புகளுக்கு சுமார் 600 திறன்மிக்க நிபுணர்களை பணிக்கு அமர்த்தவுள்ளது.

இது குறித்து இக்குழுமத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ரான் வான் கெமனேடே கூறுகையில், “அய்தரா பாத்தில் உள்ள புதிய தொழில்நுட்ப மய்யத்தில் நாங்கள் செய்யும் இந்த முதலீடு, தொழில்நுட்ப கண்டு பிடிப்பு களுக்கான முதன்மை மய்யமாக இந்தியாவின் நீண்ட கால அடிப்படையிலான வளர்ச்சியைப் பிரதிபலிக்கும். 

அய்தராபாத்தில் குறிப்பாக அதன் திறமைமிக்க பொறியாளர்கள் மற்றும் சிறப்பான தொழில் நுட்ப சூழலைப் பொறுத்து ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும்என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *