அருப்புக்கோட்டை, ஜூன்18- அருப்புக்கோட்டை பெரியார் மாளிகையில், 14.06.2025 அன்று மாலை 6 மணியளவில், விருதுநகர் மாவட்ட கழக தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கா.நல்ல தம்பி தலைமையில், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ந.ஆனநதம், மாவட்ட ப.க. தலைவரும் சாத்தூர் நகர்மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.அழகர் அனைவரையும் வரவேற்றார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கூட்ட நோக்கங்கள் குறித்தும், கழக அமைப்புப் பணிகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெ.முரளி, வெ.புகழேந்தி, நகர இளைஞரணித் தலைவர் க.திரு வள்ளுவர், மு.முனியசாமி, பா.சங்கர், தி.சங்கர்ராஜ் மற்றும் தோழர்கள் பங்கேற்று கருத்துகள் கூறினர்.
13.7.2025 – விருதுநகரில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு, உலகத் தலைவர் பெரியார் நூல் அறிமுக விழா நிகழ்வினை எழுச்சியுடன் நடத்துவதெனவும், ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதெனவும், நிகழச்சிக்கு ஒப்புதல் வழங்கிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகம் பெரியார் மயம் பெரியார் உலக மயம் எனும் நோக்கில் அமையவுள்ள பெரியார் உலகம் நிதி திரட்டித் தருவதெனவும், குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரி யல் பயிற்சிப் பட்டறையில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து இளைஞர்கள், மாணவர்கள் பங் கேற்க ஆவண செய்வதெனவும் தீர் மானிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை பெரியார் மாளிகை 60ஆம் ஆண்டில், படிப்பகம், நூலகம், புத்தக மய்யம் என சிறப்பாக வழிநடத்தி வரும் கழகப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. மாவட்டத் துணைத் தலைவராக பா.இராசேந்திரன், துணைச் செயலாளராக இரா.அழகர், மாவட்ட இளைஞரணித் தலைவராக க.திருவள்ளுவர், செயலாளராக அ.பெரியார்செல்வம், அருப்புக்கோட்டை நகரச் செயலாளராக மு.முனியசாமி ஆகியோர் பொறுப்பேற்றனர். நிறை வாக பா.இராசேந்திரன் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.