அமைதியாய் இருங்கள்!

2 Min Read

மணிப்பூர் மக்களுக்கு ஒரு தாயாக வேண்டுகோள் விடுக்கிறேன் சோனியா காந்தி பரிவு

அரசியல்

புதுடில்லி, ஜூன் 22- அமைதியை கடைப் பிடிக்குமாறு மணிப்பூர் மக்க ளுக்கு  சோனியா காந்தி வேண்டு கோள் விடுத்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவரும், அக்கட்சியின் நாடாளு மன்றத் தலைவருமான சோனியா காந்தி மணிப்பூர் மக்களுக்கு வேண்டு கோள் விடுத்து காணொலி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். காங் கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள காட்சிப் பதி வில் அவர் கூறியிருப்பது: 

“மணிப்பூர் மாநில சகோதர சகோ தரிகளே… சுமார் 50 நாட்களாக மணிப்பூரில் நடந்துவரும் மிகப் பெரிய மனித அவலத்துக்கு சாட்சி யாக இருக்கின்றோம். முன்னெப் போதும் இல்லாத அளவிலான வன்முறை மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை சீரழித்து ஆயிரக்கணக் கானோரை அவர்களின் வேர்களை இழக்கச் செய்து தேசத்தின் மன சாட்சியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த வன்முறை யில் பாதிக்கப்பட்டு தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த வாடு பவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் வீடு களில் இருந்து வெளியேற்றப்பட்டு நிர்கதியாக்கப்பட் டுள்ள மக்களின் நிலையினைக் கண்டு நான் மிகவும் வருத்தமடைகிறேன். 

இணக்கமான முறையில் வாழ்ந்த சகோதர, சகோதரிகள் இன்று ஒரு வருக்கொருவர் எதிரிகளாக மாறி வன் முறையில் ஈடுபடுவதைப் பார்ப் பது இதயத்தை மிகவும் நொறுக் குகிறது. மணிப்பூர் மக்கள் நீண்ட பாரம்பரியத் தையும், இணக்கமான வரலாறும் கொண்டவர்கள். அமைதி யின் பாதையை நோக்கிய நகர்வு, நமது குழந்தைகளின் மரபுரிமையான எதிர் காலத்தை வடிவமைக்க உதவும். மணிப்பூர் மக்களிடம், குறிப்பாக அங்குள்ள எனது வீரமிக்க சகோதரி களிடம் அங்கு அமைதியும் நல்லிணக் கமும் திரும்புவதற்கான நடை முறையை முன்னெடுக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மணிப் பூர் மக்கள் மீது எனக்கு அபா ரமான நம்பிக்கை உள்ளது. இந்தச் சோத னையை நாம் ஒன்றாக கடந்து செல் வோம்” என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வடகிழக்கு மாநில மான மணிப்பூரில் 53 சதவீதம் இருக்கும் மெய்தி சமூகத்தினர், தங் களை பழங் குடியினர் பட்டியலில் (எஸ்டி) சேர்க்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு, பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள குகி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மைத்தி சமூக மக்களை பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3-ஆம் தேதி அமைதிப் பேரணி நடத்தினர். 

இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. இத னைத் தொடர்ந்து ஒரு மாதத்துக் கும் மேலாக நீடித்து வரும்மோதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தில் அமைதியை நிலை நாட் டுவதற்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட் டுள்ளன. 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இணைய சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *