சென்னை, ஜூன் 22 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் இதய அறுவைச் சிகிச்சை, சென்னை காவேரி மருத்துவ மனையில் நேற்று (21.6.2023) நடந்தது. இந்த அறுவை சிகிச்சை 5 மணி நேரம் நடந் தது.
தமிழ்நாடு மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக் கத்துறையால் கைது செய்யப் பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.இதனையடுத்து அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட் டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடந்தது. அப்போது அவரது இருதயத் தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவர்களால் பரிந்துரைக் கப்பட்டது. இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளித்தது.
இதனையடுத்து காவேரி மருத்துவமனைக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் மேற் கொள்ளப்பட்ட பரிசோதனை யில், உடல்நலனை கருத்தில் கொண்டு அவருக்கு உடனடி யாக பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. காவேரி மருத்துவமனையில் நேற்று அதிகாலையிலேயே அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப் பட்டது. இதற்காக மருத்துவ மனையின் 7ஆ-வது தளத்தில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி, அறுவை சிகிச்சை கூடத்துக்கு கொண்டு செல் லப்பட்டார். அதிகாலை 5.30 மணிக்கு செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை தொடங்கியது. இரு தய அறுவை சிகிச்சை மூத்த நிபுணர் ஏ.ஆர்.ரகுராம் தலை மையிலான மருத்துவக் குழு வினர் இந்த அறுவை சிகிச் சையை மேற்கொண்டனர். இந்த அறுவை சிகிச்சை காலை 10.35 மணிக்கு நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 5 மணி நேரம் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை நடத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு, செந்தில் பாலாஜி தொடர்ந்து 3 மணி நேரம் மயக்க நிலையில் இருந்ததாகவும், அவரது உடல் நிலை சீராக இருந்ததாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரி விக்கப்பட்டது. அறுவை சிகிச்சை நடந்து முடிந்த சிறிது நேரத்திலேயே, அமைச்சர் செந்தில் பாலாஜி அய்.சி.யூ. வார்டுக்கு மாற்றப்பட்டார். அய்.சி.யூ. வார்டில் 2 அல்லது 3 நாட்கள் அவர் சிகிச்சை பெறுவார் என்றும், அதன் பிறகு சுமார் ஒரு வார காலம் சாதாரண வார்டில் சிகிச்சை பெறுவார் என்றும் கூறப் படுகிறது.
இதற்கிடையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்த சிறிது நேரத்தில் காவேரி மருத்துவ மனை செயல் இயக்குநர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:- அமைச்சர் செந்தில் பாலா ஜிக்கு இதய அறுவை சிகிச்சை மூத்த நிபுணர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பைபாஸ் இருதய அறுவை சிகிச்சையை மேற் கொண்டனர். இதில் அவரது இதயத்துக்கு செல் லும் ரத்த நாளத்தில் இருந்த 4 அடைப் புகள் அகற்றப்பட்டு உள்ளன.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தத்தின் இயக் கம் சீராக உள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிந்தைய தீவிர சிகிச்சை பிரிவில், பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்து வர்கள் -செவிலியர்கள் குழு அவரை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மா.சுப்பிரமணியன்
செந்தில் பாலாஜியின் தற்போதைய உடல் நிலை குறித்து மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (21.6.2023) செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தீவிர அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் செந்தில் பாலாஜி ‘போஸ்ட் ஆபரேஷன்’ வார்டுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். அவர் எத்தனை நாள்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டும், பொது வார்டுக்கு எத்தனை நாள்களுக்கு பிறகு அனுமதிப்பது, எவ்வளவு நாள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் மருத்துவர்கள் இதற்கு பிறகு தான் சொல்வார்கள். செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் அவரிடம் நான் எப்படி பேச முடியும்?. மருத்துவர்களிடம் தொடர்ச்சி யாக பேசிக்கொண்டிருக் கிறேன். காலை 4 மணிக்கே அவரை அறுவை சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றதில் இருந்து, நாங்கள் மருத்து வர்களிடம் விவரங்களை கேட்டுக்கொண்டுதான் இருந் தோம் 3 பெரிய கடுமையான அடைப்புகளை அகற்ற 5 மணி நேரம் ஆகியது. மருத்துவர் ரகுராம் இந்த அறுவை சிகிச் சையை செய்து இருக்கிறார். செந்தில் பாலாஜிக்கு சுய நினைவு திரும்பிய பிறகுதான் மற்றவர்களிடம் பேசுவார். இவ்வாறு அவர் கூறினார்.