தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பெருங்குடி மண்டலம், புழுதிவாக்கம், வார்டு-186க்குட்பட்ட சதாசிவம் நகரில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகால்வாயினைப் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வின்போது, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்
ச.அரவிந்த் ரமேஷ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் தொடர மைப்பு கழக மேலாண்மை இயக்குநர்
இரா.மணிவண்ணன், மண்டலக் குழுத் தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜெ.மணிகண்டன், சமீனா செல்வம் மற்றும் மண்டல அலுவலர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.