கீழடி அகழாய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்! பிரதமர் மோடியிடம் பி.வில்சன் எம்.பி. வலியுறுத்தல்

2 Min Read

சென்னை, ஜூன் 17- கீழடி அகழாய்வு அறிக்கையை முழுமை யாகவும், எவ்வித திருத்தங்கள் இன்றியும் உடனடியாக வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடியை தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார்.

கீழடி முக்கியத்துவம்

தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் வெளியிட் டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தால் இயக்கப்படும் பா.ஜ.க. தலைமை யிலான ஒன்றிய அரசு, கீழடியின் முக்கியத்துவத்தை புதைத்து விடத் தீர்மானித்தது போலத் தோன்றுகிறது.

கீழடியில் அகழாய்வுப் பணிகள் 2015ஆம் ஆண்டு தொடங்கப் பட்டன. அதற்கு அறிவியல் பூர்வமான ஆய்வுகள் உறுதுணை யாக இருந்தன. ஜனவரி 2023இல், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா 982 பக்கங்கள் கொண்ட விரிவான இறுதி அறிக்கையை சமர்ப்பித்தார். இருப்பினும் இந்த அறிக்கையானது தற்போது வரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. ஏன்? ஏனெனில், அந்த அறிக்கை ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தத்தால் இயக்கப்படும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசால் புனையப்பட்ட கட்டுக்கதைகளை தோலுரிக்கிறது.

ஒன்றிய அரசானது கீழடி தொடர்பான அறிவியல் ஆய்வு களுக்கு நேரம் தேவைப்படுகிறது. ஆகவே, தாமதமாகிறது எனத் தொடர்ந்து கூறி வருகிறது.

ஆனால், அவர்களுக்குப் பிடித்த பண்பாட்டு வரலாற்றை ஒத்துப்போகும் பிற அகழாய்வுத் தளங்களுக்கு மட்டும் இந்த கால தாமதம் எங்கே போனது? இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனமானது, தாங்கள் பரிந்துரை செய்த திருத்தங்களை தொல்லியல் ஆய்வாளர் செய்திடவில்லை என்கிறது. இருப்பினும், ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தன்னுடைய கண்டுபிடிப்புகளை அறிவியல் பூர்வமான தரவு களுடன் முன்வைத்தார்.

ஒன்றிய அரசு உண்மையாகவே கூட்டாட்சி முறையை மதிக்கிறதானால், கீழடி இந்தியாவின் பெருமையாகக் கொண்டாடப்பட வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, சமஸ்கிருதம் தெற்கே வருவதற்கு முன்பே தமிழ் நிலப்பரப்பில் எழுத்து, தொழில் மற்றும் வளமான கலாச்சாரம் இருந்ததை கீழடி நிரூபிப்பதால், அவர்கள் அதைத் தடுத்து, தாமதப்படுத்தி, கேள்விக்குள்ளாக்குகின்றனர். இந்த தாமதம் தற்செயலானது அல்ல.

உடனே வெளியிட வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் திட்டமிட்ட தாமதத்தை சரியான வகையில் அடையாளம் காட்டி, அவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப் படுத்தி, தமிழர் தொன்மையின் மறுக்க முடியாத சான்றாக கீழடி விளங்குவதை பறைசாற்றியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பி.வில்சன், வரலாறானது சிதைந்த தடயங்களின் வழியாக உண்மைகளை வெளிக் கொணரும்போது, ஒன்றிய அரசு அதை மறைக்க முயற்சிக்கலாம்.ஆனால் அந்த உண்மையை நிரந்தரமாக மறைக்க முடியாது. கீழடி எழும் – அதன் மூலம் தமிழர் பெருமையும் எழும்.கீழடி அகழ்வாய்வு அறிக்கையை முழுமையாகவும்,எவ்வித திருத்தங்கள் இன்றியும் உடனடியாக வெளியிடவேண்டும் என்று பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *