காஞ்சிபுரம், ஜூன் 22 – காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருட் களை சந்தைப்படுத்த நடமாடும் அங்காடி. தொடங்கப்படும் என் றும், இதற்கு மாற்றுத் திறனாளிக ளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கை: காஞ்சி மாவட் டத் தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட் களை சந்தைப்படுத்த நடமாடும் மதி அங்காடிகள் அமைக்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இந்த நடமாடும் மதி அங் காடிகள் காஞ்சிபுரம் மாவட்டத் துக்கு இரண்டு என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் மதி அங்காடி களை இயக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பயனாளி கள் கண்டிப்பாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். மகளிர் மாற்றுத் திறனா ளிகள், கணவரால் கைவிடப்பட்ட விதவை மகளிர் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக் கப்படும். சிறப்பு சுய உதவிக்குழு. ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் பயனாளி யின் சுய உதவிக் குழு தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓர் ஆண்டுக்கு மேல் பூர்த்தி செய் திருக்க வேண்டும். தேர்வு செய்யப் படும் உறுப்பினர் மீது எந்தவித புகார்களும் இல்லை என்பதையும் வங்கி மற்றும் சமுதாய அமைப்பு களில் வாராக் கடன் ஏதும் இல்லை எனவும் சான்றிதழ் பெற வேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரர் கள் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மக ளிர் திட் டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் – 631501 என்ற முகவரியில் விண்ணப் பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மேலாளர் -8438969466 மற்றும் உதவி திட்ட அலுவலர் (வாழ்வா தாரம்) – 9444094282 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.