“நம்நாடு” நாளிதழின் ஆசிரியராக அறிஞர் அண்ணா அவர்கள் பொறுப்பு ஏற்ற நாள் இன்று (15.06.1952).
திருச்சியில் மாணவர் பயிற்சி முகாமை (20 நாள் நடைபெற்றது) துவக்கி வைத்து தந்தை பெரியார் அவர்கள் சிறப்புரையாற்றிய நாள் இன்று (15-06-1964).
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன் நடைபெற இருந்த கோயில் பகிஷ்காரக் கிளர்ச்சியை ஒத்திவைத்து தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை விட்ட நாள் இன்று (15-06-1972).
தந்தை பெரியார் அவர்களின் “பொன்மொழிகள்” என்ற நூலுக்கு இருந்த தடை டாக்டர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தடை நீக்கப்பட்ட நாள் இன்று (15-06-1979).
தமிழ் உணர்வாளரும், பெரியார் சிந்தனையாளரும், இனமான திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான மணிவண்ணன் அவர்களின் நினைவு நாள் இன்று (15-06-2013).