பா.ஜ.க. பல மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்துவிட்டது பாட்னா கூட்டத்தில் ராகுல் காந்தி

1 Min Read

அரசியல்

பாட்னா, ஜூன்23- மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்பட பல மாநிலங்களில் பாஜக தனது செல் வாக்கை இழந்துவிட்டது என்றும் அங்கெல்லாம் பா.ஜ.க.வை காண முடியாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னா வில் தற்போது நடைபெற்று வரு கிறது. .

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, இந்தியாவில் தற்போது சித்தாந்த போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவை ஒற் றுமைப்படுத்துவதற்கான சித்தாந் தத்துக்கும், ஒற்றுமையை சிதைக்கும் சித்தாந்தத்துக்கும் இடையே இந்தப் போர் நடந்து கொண்டிருக்கிறது. நாட்டில் வெறுப்பையும் வன் முறையையும் பா.ஜ.க. பரப்பிக் கொண்டிருக்கிறது. நாட்டை பிளவுபடுத்துகிறது. நாம் அன்பையும், ஒற்றுமையையும் பரப்புவதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக நாம் அனைவரும் இன்று இங்கே ஒன்று கூடி இருக்கிறோம்.

இந்தக் கூட்டத்தில் உங்கள் மத்தி யில் நான் சொல்கிறேன். தெலங் கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வை எங்கேயும் பார்க்க முடிய வில்லை. அந்தக் கட்சி செல்வாக்கை இழந்து விட்டது. இந்த 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். வரும் நாடாளு மன்றத் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஏனெனில், நாம் ஏழைகளின் நலனுக்காக பாடுபடு கிறோம். ஆனால், பா.ஜ.க. 2-3 தொழி லதிபர்களின் நலனுக்காகப் பாடுபடு கிறது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய ஆதரவைப் பெற்று வருகிறது. கருநாடகாவில் பாஜக தோற் கடிக்கப்பட்டது போல வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *