சோமங்கலம், ஜூன் 23 தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் சோமங்கலம் பகுதியில் 11.6.2023 அன்று மாலை 6.30 மணி யளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் விளக்க தெருமுனை கூட்டம் அ.ப.நிர்மலா வரவேற்புரையுடன், க.இன மாறன் தலைமையில் மாவட்ட தலைவர்
ப.முத்தையன், மாவட்ட செயலாளர்
கோ.நாத்திகன், தி.இரா.இரத்தினசாமி, நெய்வேலி வெ.ஞானசேகரன், ஆ.இர.சிவ சாமி, ந.கரிகாலன் மற்றும் தாம்பரம் சு.மோகன் ராஜ் ஆகியோர் முன்னிலையில் கழக பேச் சாளர் பா.மணியம்மை உரையாற்றினார்.
தொடந்து சோமங்கலம் பகுதி மகளிர் தோழர் பு.லோகவாணி கழகக் கொடி ஏற்றி னார். கழகக் கொடி ஏற்றும் தருணத்தில் கழக துணை பொது செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் கழக கொள்கை முழக்க மிட்டார். தொடர்ந்து கழகத் தோழர்கள் தொடர் முழக்கமிட்டனர். தொடந்து கழக பேச்சாளர் தஞ்சை இர.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றும்போது கடந்தகாலம், நிகழ் காலம், எதிர்காலம் மற்றும் எந்தக் காலத்திலும் தந்தை பெரியார் கொள்கை, கோட்பாடு, சொல், செயல் மற்றும் உழைப்பு இந்தியாவிற்கு, தமிழ்நாட்டிற்கு ஏன் உலகத்திற்கு உலக மக்களுக்கு பயன்படும் வகையில் இனி வரும் உலகம் தந்தை பெரியார் அவர்களை சுற்றியே இயங்கும் என்று மிக உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துரைத்து தொடர்ந்து நம் பணி பார்ப்பனியத்தை வேரறுக்கும் பணியாகவே இருக்கும் என்று உரையாற்றி நிறைவு செய்தார்.
நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன்,
ந.கரிகாலன், இறைவி, எஸ்.ஆர்.வெங்கடேஷ், டி.லலிதா, எஸ்.நூர்ஜகான், மா.இராசு, க.தமிழ்ச் செல்வன், சேலம் கே.செல்வம், சீர்காழி கு.நா.இராமண்ணா, சண்.சரவணன், மு.திருமலை, சரண்குமார், பு.குமார், எம்.ராஜு, பழனிசாமி, சா.தாமோதரன், அ.ஏழுமலை, மதுரவாயல் சு.வேல்சாமி, புருசோத்தமன், நடுவீரப்படு அம்பேத் அரி, எச்.வி.மணிவண்ணன், நா.வினோத், கி.கரிகாலன், வீ.வினோத் குமார், அருண், சந்திரசேகரன், பெரியார் பிஞ்சுகள் பா.மு.அபினா சுருதி, பா.மு.கோவன் சித்தார்த் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.