பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் செயலாளர் ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அலுவலர் இறந்த பின் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு உடற் கொடை வழங்கிய கரிச வயல் மூ. சத்தியமூர்த்தி அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவுநாளை (15..06..2025)முன்னிட்டு நினைவு கூர்ந்து திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 3000 நன்கொடை வழங்கி உள்ளனர். ச.இராசம் – மனைவி பா. மங்கையர்க்கரசி, ச.கனிமொழி – மகள்கள், பாலசுப்பிரமணியன் – மருமகன்.
*****
அருப்புக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் – இலக்குமி இணையரது மகன் எழிலன் – தமிழ்ச்செல்வி இணையர் தமது 32 ஆவது இணை ஏற்பு நாள் (14.06.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.2000 இரண்டாயிரம் நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்.