சென்னை (1938)
13.11.1938இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் தந்தைக்கு “பெரியார்” பட்டம் சூட்டப்பட்டது.
தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு (13.11.1938), மாநாட்டுத் தலைவர்: திருவரங்க நீலாம்பிகை அம்மையார், வரவேற்புக் குழு தலைவர்: வ.பா. தாமரைக்கண்ணி அம்மையார், மூவரசர் தமிழ்க் கொடியை ஏற்றியவர் மீனாம்பாள் சிவராஜ், மாநாட்டுத் திறப்பாளர்: பண்டிதை அ. நாராயணி அம்மையார், தலைவரால் கொண்டு வரப்பட்டு பல பெண்மணிகளால் ஆதரிக்கப்பட்டு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறின.
தீர்மானங்கள் வருமாறு: 1. இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய இயலாமற்போன வேலைகளை இன்று நமது தலைவர்
ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும் எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் ‘பெரியார்’ என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது.