சுயமரியாதை உள்ளவர்கள் தமிழர்கள்! டில்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள நினைப்பதா? அது ஒரு காலமும் நடக்காது! அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்வினை

5 Min Read

சேலம், ஜூன் 13– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (12.6.2025) சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசுவிழாவில், 1649.18 கோடி ரூபாய் மதிப்பிலான 225 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 509 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,01,203 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, உரையாற்றுகையில், ‘‘சுயமரியாதை உள்ளவர்கள் தமிழர்கள்! டில்லியிலிருந்து தமிழ்நாட்டை ஆள நினைப்பதா? அது ஒரு காலமும் நடக்காது’’ என்று உறுதிபடக் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஆற்றிய உரை வருமாறு:–

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக இருப்பது டெல்டா மாவட்டங்கள் என்றால், அதற்கு உயிர்நாடி காவிரி நீர்தான்! அந்தக் காவிரி நீரைத் தேக்கி 16 மாவட்டங்களைச் செழிக்க வைக்கக்கூடிய மேட்டூர் அணையை கடந்த 4 ஆண்டுகளாக குறித்த தேதியில் திறந்து வைத்து விவசாயிகளின் வயிற்றில் பால்வார்த்த மகிழ்ச்சியோடு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சேலம் வந்திருக்கிறேன்.

காவிரி போல் மகிழ்ச்சி பொங்குகிறது!

அணையிலிருந்து, பொங்கி வரும் காவிரி போல உங்களையெல்லாம் பார்க்கின்ற போது எனக்கு மகிழ்ச்சி பொங்குகிறது.

இந்தமகிழ்ச்சியை குறிப்பாக உழவர்க ளுக்கு இன்னும் மகிழ்ச்சியை கூட்டும் வகையில், தொடக்கத்திலேயே ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.

விவசாயிகள் ஒரு குவிண்டாலுக்கு இனி 2500 ரூபாய் பெறுவார்கள். அதற்கேற்றாற் போல் சாதாரண ரகத்திற்கு 131 ரூபாய் எனவும், சன்ன ரகத்திற்கு இனி 156 ரூபாய் எனவும், இனி நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். இதனால், சாதாரண ரகம் 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், சன்ன ரகம் 2 ஆயிரத்து 545 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும். இதனால், 10 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள்.

சேலம் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்பு களை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

முதலாவது அறிவிப்பு – சேலம் மாநகராட்சி பகுதிகளில், 100 கோடி ரூபாய் செலவில் சாலைகள் மேம்பாடு, போதிய கழிவுநீர்க் கால்வாய்கள் மற்றும் சிறுபாலங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

இரண்டாவது அறிவிப்பு – சேலம் மாநக ராட்சி செவ்வாய்ப்பேட்டையில் இருக்கும் தினசரி சந்தை 9 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

மூன்றாவது அறிவிப்பு – தலைவாசல் வட்டத்தில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில்இலுப்பநத்தம் கிராமத்தில் இருக்கும் வேளாண் விற்பனை நிலையம் 10 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும்.

நான்காவது அறிவிப்பு – மேட்டூர் மற்றும் நரசிங்கபுரத்தில் புதிய நகராட்சி அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.

அய்ந்தாவது அறிவிப்பு – சங்ககிரி நகராட்சியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும்.

ஆறாவது அறிவிப்பு – தாரமங்கலம் நக ராட்சியில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் இடைப்பாடி நகராட்சியில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் ஆத்தூரில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் புதிய குடிநீர்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பயன் பெற்றவர்கள் பட்டியல்!
நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடிகிறது!

தூரத்தில் இருக்கும் இலக்குகளையும், விரைவாக அடைவதற்கான பாதையை நாம் அமைத்துக்கொண்டு இருக்கிறோம்! அதனால்தான், ஒவ்வொரு மாவட்டத்திலும் நம்முடைய ஆட்சியில் பயன்பெற்றவர்களின் பட்டியலை புள்ளிவிவரத்தோடு என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடிகிறது!

மகளிருக்கு, மாணவிகளுக்கு, மாணவர்களுக்கு மாதம், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டு வருகிறோம். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் இந்த முத்திரைத் திட்டங்களால் சேலம் மாவட்டத்தில் மட்டும் பயனடைந்தவர்களின் விவரங்களை சொல்ல வேண்டும் என்றால்,

wகலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 5 இலட்சத்து 58 ஆயிரம் மகளிர்.

wபுதுமைப்பெண் திட்டத்தில் 59 ஆயிரம் மாண விகள்

wதமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 18 ஆயிரம் மாண வர்கள்

w வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 29 இலட்சம் முறை சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

w 86 ஆயிரம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தில் சூடாகவும், சுவையாகவும் உணவு பரிமாறு கிறோம்!

w கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைப்பு திட்டத்தில் 2 இலட்சம் விவசாயிகள் பலன் பெற்றி ருக்கிறார்கள்!

w நான் முதல்வன் திட்டத்தில் 4 இலட்சம் இளை ஞர்கள் திறன் பயிற்சிகள் பெற்றிருக்கிறார்கள்.

w தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம். அதில், சேலம் மாவட்டத்தில் மட்டும் 56 கோயில்களுக்கு குட முழுக்கு நடைபெற்றிருக்கிறது. இப்படிநம்முடைய சாதனைகளை நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

இதன் தொடர்ச்சியாகதான், இந்த விழாவில், 17 அரசுத் துறைகளைச் சேர்ந்த திட்டங்களின் மூலமாக, ஒரு இலட்சத்து ஆயிரத்து 203 பயனாளிகளுக்கு 204 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டிருக்கிறது! இப்படி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, நலத்திட்ட உதவிகளை நான் தொடர்ந்து வழங்கிக் கொண்டு வருகிறேன். தினமும் செய்திகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்… காலையில் ஒரு ஊரில் நலத்திட்ட உதவிகள் வழங்கியிருப்பேன்.. மாலையில், இன்னொரு ஊரில் வேறு ஒரு நிகழ்ச்சியில்மக்களைச் சந்தித்துக்கொண்டு இருப்பேன்.

தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ்
என்ன நிலையில் இருக்கிறது!

நான் கேட்கிறேன்… மாண்புமிகு திரு.அமித்ஷா அவர்களே… மதுரை வந்தீர்களே.. பத்து ஆண்டுக்கு முன்பு உங்கள் அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் என்ன நிலையில் இருக்கிறது என்று சென்று பார்த்தீர்களா? அதே மதுரையை சுற்றி, நாம் ஆட்சிக்கு வந்த இந்த 4 ஆண்டுகளில், கலைஞர் நூற்றாண்டு நூலகம், உலகத் தரத்திலான ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம் என்று ஏராளமான பணிகளை நாங்கள் முடித்திருக்கிறோம்… இதுதான் பி.ஜே.பி. மாடலுக்கும், திராவிட மாடலுக்கும் உள்ள வித்தியாசம்!

சுயமரியாதை உள்ளவர்கள தமிழர்கள்!

சுயமரியாதை உள்ளவர்கள் தமிழர்கள்! நான் உறுதி யோடு சொல்கிறேன். டில்லியிலிருந்து தமிழ்நாட்டை ஆள நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! நெருக்கடிகளை மீறி நெருப்பாற்றில் நீந்தி தமிழ்நாட்டை உயர்த்தி வரக்கூடிய திராவிட மாடல் அரசுக்கு ஆதரவாக மக்கள் இருக்கிறீர்கள்! இப்போது இருப்பதுபோலவே 2026-லும் நீங்கள் ஆதரவாக இருப்பீர்கள். எப்போதும் நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம், இருப்போம் என்று கூறி விடைபெறுகிறேன்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

இவ்விழாவில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை – – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சர் இரா. ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.எம். செல்வகணபதி, மலையரசன்,
ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். சதாசிவம்,
இரா. அருள், சேலம் மாநகராட்சி மேயர்
ஆ. இராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா. பிருந்தா தேவி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *