பூமியில் வாழ்ந்த டைனோசர் இனங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் விண்கல் விழுந்ததில் முற்றிலும் அழிந்தன. முன்னதாக இவை அழிவதற்கு முன் குளிர், பனிப்பிரதேசம் உட்பட உலகின் அனைத்து காலநிலை பகுதிகளிலும் வாழ்ந்தன.
இதன்படி லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஆஸி., யின் விக்டோரியா பகுதி, தற்போதைய அண்டார்டிகாவை போல பனிப்பாறையாக இருந்தது. ஏனெனில் இரண்டும் ஒரே துருவப்பகுதியில் இணைந்திருந்தன. இந்நிலையில் டைனோசர்கள், விக்டோரியாவில் நிலவிய பனிப்பாறை சூழலையும் சமாளித்து வாழ்ந்தன என ஆய்வு தெரிவித்துள்ளது.