திண்ணைப் பிரச்சாரம் – தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்படும் தென்காசி கழக மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடலில் தீர்மானம்

Viduthalai
3 Min Read

தென்காசி, ஜூன் 12– தென்காசி கழக மாவட்டத்தின் மகளிர் அணி. மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 8.6.2025 அன்று மாலை 4 மணியளவில் தென்காசி மேலமெஞ்ஞானபுரம் நகரில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட மகளிர் அணி தலைவர் தங்கம் தலைமை வகித்தார். மருத்துவர் கவுதமி தமிழரசன் வரவேற்புரை ஆற்றினார். அவர் தமது வரவேற்புரையில் பெண்களை, தலைமை இருக்கையில் அமர வைத்து, தலைமைப் பொறுப்புகளை அளித்து, ஆண்களுக்கு இணையாக பெண்களையும் நடத்துகின்ற ஓர் இயக்கம் திராவிடர் கழகம் என்றும், தமிழர் தலைவர் அவர்கள் நமக்கு அளித்திருக்கின்ற வேலை திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி தன்னுடைய கருத்துரையில், தென்காசி மாவட்டத்தின் மேலமெஞ்ஞானபுரம் கிராமம் என்பது, தன்னுடைய தாய் வீடு போல என்றும், தமிழர் தலைவர் அவர்கள் எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து அமைப்புப் பணிகளை மிக விரைவாக செய்ய வேண்டும் என்று பணித்திருந்த அடிப்படையில், காப்பாளர் சீ.டேவிட் செல்லதுரை, தென்காசி கழக மாவட்டத்தின் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், தோழர் கவுதமி தமிழரசன், மாவட்ட செயலாளர் கை.சண்முகம் ஆகியோர் கலந்துரையாடல் கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்தார்.

தமிழர் தலைவர் அவர்கள் மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கு அறிவித்துள்ள வேலை திட்டங்களை பற்றியும்,பெரியார் பிஞ்சு சந்தா சேர்ப்பு பணி குறித்தும், பாஜக என்கின்ற ஒரு கொடுங்கோல் அரசு நடைபெறுகின்ற இந்த காலகட்டத்தில், தன்னுடைய உயிரையே விலையாக வைத்து , தொடர்ந்து சுற்று பயணங்கள் மேற்கொண்டு 92 வயதிலும் தொய்வின்றி பொதுப்பணி ஆற்றும் நம் தமிழர் தலைவர் வழியில் பயணிக்க வேண்டும் என்றும் விரிவாக உரையாற்றினார்.

தென்காசி மாவட்ட கழக காப்பாளர், சீ.டேவிட் செல்லதுரை தன்னுடைய உரையில், மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் சிறப்பாக செயல்படுவதை பாராட்டியும், மகளிர் தோழர்கள், தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி தனியாக நின்று நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும், கழகத் தோழர்கள் அதற்கு உறுதுணையாக நிற்போம் என்றும் கூறினார்.

தொடர்ந்து தென்காசி கழக மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி, அண்மையில் மறைந்த மகளிர் பாசறை தோழர் பெத்சி பொன்மலர் மறைவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மகளிர் அணி, மகளிர் பாசறை, மாவட்ட பொறுப்பாளர்கள்:

மகளிர் அணி

மாவட்டத் தலைவர்: தங்கம்

மாவட்டத் துணைத் தலைவர்: டி.சாந்தி

மாவட்டச் செயலாளர்: வடகாசி

மாவட்டத் துணைச் செயலாளர்: சுமித்ரா

மகளிர் பாசறை

மாவட்டத் தலைவர்: ஜான்சி பொன்மலர்

மாவட்டத் துணைத் தலைவர்: சித்ரா

மாவட்டச் செயலாளர்–: தேன்மொழி

மாவட்டத் துணைச் செயலாளர்: பாக்கியலட்சுமி

கலந்து கொண்டோர்

த.வீரன் (மாவட்ட தலைவர்), கை.சண்முகம் (மாவட்ட செயலாளர்). பேச்சியம்மாள், ஜோ.சு.தமிழினி, எஸ்.ஜான்சி ஜெயமலர், சி.சேகர், ராகினி, ரம்யா, பாப்பா, மேரி, வசந்தி, அன்ன புஷ்பம், தேன்மொழி, எம்.மல்லிகா, கலா, மி.சுமித்ரா, டி.சாந்தி, பாக்கியத்தாய், ஞானமணி சமுத்திரம், சு.சீரன், செல்வி, தி.ஆல்பர்ட், ரா.வில்லி கிரஹாம், பேச்சியம்மாள் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தென்காசி கழக மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் ஒருங்கிணைந்த “திராவிட மகளிர் சங்கமம்” நிகழ்ச்சி நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் பிறந்த நாளை மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பாக சிறப்பாக கொண்டாடுவது.

தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி தொடர்ந்து, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது, திண்ணைப் பிரச்சாரம் நடத்துவது.

தெருமுனைக் கூட்டம் நடத்துவது.

மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கு தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள பெரியார் பிஞ்சு இதழ் சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது.

மாவட்ட, கிளை, ஒன்றிய அளவில் மகளிர் பொறுப்பாளர்களை நியமிப்பது.

தமிழர் தலைவர் அவர்களின் வேண்டுகோள்படி இயக்கம் சார்ந்த சிறு குறு வெளியீடுகளை பொதுமக்கள் மத்தியில் விற்பனை செய்து பிரச்சார பணி மேற்கொள்வது.

குற்றாலம் பயிற்சிப் பட்டறை முகாம் வெற்றியடைய ஒத்துழைப்பு அளிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக ஜான்சி ஜெயமலர் நன்றி உரை ஆற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *