ஆன்மிக மாநாடு வாக்கு வங்கியாக மாறாது மதவாத அரசியலுக்கு தமிழ்நாட்டு மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் தொல்.திருமாவளவன் பேட்டி

viduthalai
2 Min Read

பெரம்பலூர், ஜூன் 11- ஆன்மிக மாநாடு வாக்கு வங்கியாக மாறாது. மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இடம் கொடுக்க மாட் டார்கள் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

பெரம்பலூரில் நேற்று (10.6.2025) விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு தேர்தல் முடியும் வரை அடிக்கடி வருவார். தமிழ்நாட்டில் பா.ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை ஒருங் கிணைத்து ஒரு வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்பது  அவருடைய எண்ணமாக உள் ளது.

ஆனால் அது இன்னும் கைகூடவில்லை. ஏற்கெனவே அவர்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகள் கூட பா.ஜனதாவுடன் இணை வதற்கு தயக்கம் காட்டி வருகின்றன.

கூட்டணிக்கே போராட்டம்

அதனை கடந்து நடிகர் விஜய்யை இந்த கூட்டணியில் இணைத்து விட வேண்டும் என்ற ஏக்கம் அவர்களுக்கு இருக்கிறது. அதுவே அவர்களுக்கு பெரிய போராட்டமாக இருக் கிறது. கூட்டணியை உரு வாக்குவதற்கே அவ்வளவு பாடுபடவேண்டிய சூழ்நிலையில் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று அவர்கள் சொல்வது நகைப்புக்கு உரியதாக இருக்கிறது. அதே சமயத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பா.ஜனதாவினர் வெற்றிக்கு ஏதுவாக ஒரு கருவியாக பயன்படுத்துவார்களோ என்ற எண்ணத்தையும், ஐயத்தையும் உருவாக்கு கிறது.

முறைகேட்டுக்கு வாய்ப்பு

அவர்கள் மராட்டியம், புதுடில்லி, ஒடிசாவை போல தமிழ்நாட்டையும் மதிப்பீடு செய்கிறார்கள். தமிழ்நாடு இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு அரசியலைக் கொண்ட மாநிலம் என்பது அவர் களுக்கு தெரியும். இருந் தாலும் முயற்சித்து பார்க்கிறார்கள். அதில் தோல்வியைத்தான் தழுவுவார்கள்.

இந்தியா முழுவதும் வாக்குச்சீட்டு பதிவு முறையை நடை முறைப் படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் நடப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

பா.ஜனதா எண்ணம் நிறைவேறாது

தமிழ்நாட்டில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தி அதன் மூலம் வாக்கு வங்கியை கைப்பற்றி 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற பா.ஜனதா கட்சியின் எண்ணம் ஒரு நாளும் நிறை வேறாது. முருக பக்தர்கள் எல்லாம் பா.ஜனதா பக்கம் இருப்பார்கள் என கணக்கு போடுகிறார்கள். எத்தனை ஆன்மிக மாநாடுகளை நடத்தினாலும் தமிழ்நாட்டில் அவர்களால் வெற்றி பெற முடியாது. மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள். இவ்வாறு திருமா வளவன் கூறினார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *