இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏ.ஏ.அய்.,) கீழ் செயல்படும் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீஸ் நிறுவனத்தில் ஒப்பந்தப் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செக்யூரிட்டி ஸ்கிரீனர் 230, அசிஸ்டென்ட் 166 என மொத்தம் 396 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பிளஸ் 2/ஏதாவதுஒரு பட்டப்படிப்பு.
வயது: 18-27 (1.6.2025இன்படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
பணிக்காலம்: மூன்றாண்டு
பணியிடம்: சென்னை, பாட்னா, விஜயவாடா, வதோதரா, போர்ட் பிளேர், கோவா
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: செக்யூரிட்டி ஸ்கிரீனர் ரூ. 750, மற்ற பணிக்கு ரூ. 500. பெண்கள் /எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100
கடைசி நாள்: 30.6.2025
விவரங்களுக்கு: aaiclas.aero