மவுனம் கலைப்பாரா பிரதமர் மோடி?
500க்கும் மேற்பட்டோர் பிரதமருக்குக் கடிதம்!
புதுடில்லி, ஜூன் 24- மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் கலவரம் தொடர்பாக பிரதமர் தனது மவுனத்தை கலைக்க வேண்டும் என 550க்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளனர்.
பாஜகவின் வாக்கு அரசியலால் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பற்றி எரிந்து வருகிறது. ஜாதி, மதம், இனம் எனப் பலவகையிலும் மூண்ட மோதல்கள் உள்நாட்டு போர் அள விற்கு வன்முறை சம்பவங்களாக வெடித்துள்ள நிலையில், தொடரும் வன்முறை சம்பவங்களுக்கு 100க்கும் மேலா னோர் பலியாகி உள்ளனர். பல நூறு மக்கள் காயமடைந்து உள்ளனர், ஆயிரக் கணக்கானோர் வசிப்பிடங் களை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், மணிப்பூர் வன்முறை யை கட்டுப்படுத்தவும், வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும் எனவும் மாநிலங் களவை உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, இரண்டு மேனாள் அய்பிஎஸ் அ திகாரிகள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கள், காவல்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், பத்திரி கையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என 550க்கும் மேற் பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் ஒன் றிணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
அக்கடிதத்தில், கூறியிருப்பதாவது: “மணிப்பூரில் மெய்தி – குக்கி இனங்களுக்கு இடையே தொடரும் இனக்கலவரம் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமான மணிப் பூரில் 100-க்கும் மேற்பட்டோர் பலி யாகியுள்ள நிலையில், 50,000க்கும் மேற் பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த வன்முறையால் கடு மையாக இயல்பு வாழ்க்கையை இழந்து பாதிக்கப் பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். லட்சக்கணக் கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இவற்றுக்கு எல்லாம் காரணம் பாஜகவின் பிரிவினைவாத அரசியல் மற்றும் வன்முறைக்கு உடனடி தூண்டு தலாக இருந்த மணிப்பூர் உயர்நீதிமன்ற உத்தரவுதான். இந்த இரண்டு சம் பவங்களால்தான் மணிப்பூரில் மே மாதம் உள்நாட்டுப் போர் அளவில் வன் முறை வெடித்தது. இருதரப்பு குழுக்கள் ஆயுதம் ஏந்தியதால் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. புரியும்படி சொன்னால், பாஜகவின் பிரிவினைவாத அரசியலால் மணிப்பூர் இன்றுவரை அணை யாமல் மிகப்பெரிய அளவில் எரிகிறது. இருவேறு பிரிவைச் சேர்ந்த மக்களி டையே வெறுப்பைத் தூண்டும் பாஜகவின் அரசியல் உத்தியே மணிப்பூர் வன்முறைகளுக்கும் காரண மாகி இருக்கிறது. இதனால் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்யும் பாஜக, மணிப்பூர் கலவரங்களுக்கு பொறுப் பேற்க வேண்டும்.
பா.ஜ.க. முதலமைச்சரின் வெறுப்புப்
பேச்சால் குக்கிகளுக்கு அதிக சேதம்
முதலமைச்சர் பைரேன் சிங் மெய்தி குழுக்களுடன் நெருங்கிய தொடர்புடை யவர். இதனால் தேர்தல் நேரத்தில் மட்டும் குக்கி, சோ, நாகா மக்களிடையே வேறு மாதிரி பேசி வாக்குகளை கவ ரும்படி தனது செயல்பாட்டை வெளிப் படுத்துவார். மற்ற நேரங்களில் அதா வது தேர்தல் முடி வடைந்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின்பு குக்கி சமூகத்தை “சட்டவிரோத வெளியாட் கள்” மற்றும் “போதைக் கடத்தல் பயங் கரவாதிகள்” என்று கொச்சைப்படுத்து வது அவருக்கு சாதாரணமானது. 2022 இல் குக்கி சமூகத்தை “சட்டவிரோதமான சமூகம்” என்று அவர் வெளிப்படையாக குறிப்பிட்டார்.
மேலும் குக்கிகள் “குடும்பத்தின் ஒரு பகுதியாக இல்லை”; “மணிப்பூரின் பூர்வீகம் அல்ல” மற்றும் மணிப்பூரின் “குத்தகைதாரர்கள்” என்றும் அவர் பிரிவினை செய்தார். முதலமைச்சர் பைரேன் சிங்கின் பேச்சு காரணமாகவே நடந்து வரும் வன்முறையில் குக்கிக ளுக்கு அதிகம் சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள். குக்கி இன மக்கள் கல்வி கற்க முடியாத படி, பள்ளிகள் அதிக ளவில் குறிவைத்து கொளுத்தப்பட்டுள் ளன. அவர்களின் தேவாலயங்கள் தீக் கிரையாக்கப் பட்டுள்ளன.
பாலியல் குற்றங்கள் மூலம் தூண்டப்படும் மோதல்
மணிப்பூரில் அரங்கேறி வரும் குக்கி – மெய்தி சமூகங்களுக்கு இடையேயான மோதல்களைத் தூண்டுவதற்கு முக்கிய காரண பொருளாக பெண்கள் மீதான பாலியல் குற்ற போலிச் செய்திகள் அதி கம் உள்ளது. அதாவது இரு சமூகங் களும் மாறி மாறி பெண்கள் மீதான பாலியல் குற்ற போலிச் செய்திகளை வன்முறைக்கு சாதகமாக பயன்படுத்து வதால் பெண்கள் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருப்பது மிகவும் சோக மானது. மெய்தி பெண்களை குக்கி இன ஆண்கள் பாலியல் பலாத் காரம் செய்த தாக வதந்தி பரப்பப்பட் டதால் மெய்தி குழுக்களின் கும்பல்கள் குக்கி, சோ இன பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய சாக்காக தற் போதும் உள்ளன. தொடரும் இந்த வன்முறை வெறியாட்டத்தை உடனடி யாக நிறுத்து மாறு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். வன்முறைகள் நிறுத்தப் பட்டவுடன், சுதந்திரமான, கட்சி சார்பற்ற குடிமைச் சமூக உறுப்பினர்கள் உயிர் பிழைத்தவர்களையும், துயருற்ற வர்களையும் சந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், கொலைகள் மற்றும் பாலியல் குற்ற அறிக்கைகளை சரிபார்த்து பாதிக்கப் பட்டவர்களுக்கு அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்க முயற்சிக்க வேண்டும்.
கோரிக்கைகள்
1. மணிப்பூர் கலவரம் தொடர்பாக உடனடி யாக பிரதமர் பேச வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அவர் பொறுப்பேற்க வேண்டும்.
2. உண்மைகளை நிலைநாட்டுவ தற்கும், அதற்கான அடித்தளத்தை தயார் செய்வதற்கும் நீதிமன்றக் கண்காணிப்பு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். மேலும் மணிப்பூரின் சமூ கங்களைப் பிரிக்கும் பிளவு மற்றும் வெறுப்பைத் தணிக்க நீதியை உறுதி செய்வது மற்றும் இடை வெளியைக் களைவதற்கான அடித் தளத்தைத் தயாரிக்க வேண்டும்.
3. இந்த மோதலில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை அதிகமாக நிகழ்ந்து வருகிறது. இதனால் அனைத்து வழக்குகளுக்கும் தற்காலிக விரைவு நீதிமன்றம் அமைத்து வர்மா கமிஷன் அடிப்படையில் விசாரிக்கப் பட வேண்டும். குறிப்பாக மோதல் பகுதி களில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும்.
4. வெளியேற வேண்டிய கட்டாயத் தில் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணம் வழங்குதல் மற்றும் அவர்க ளின் கிராமங்களுக்கு பாதுகாப்பாக திரும்புவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். வீடுகளையும், வாழ்க்கை யையும் மீண்டும் கட்டியெழுப்ப நிவா ரண உதவிவேண்டும். கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், இயல்பு நிலையுடன் பாது காப்பாக இருக்க உத்தரவாதம் அளித்தல், வீடு களை இழந்தவர்களுக்கும் வீடு கட்டி தருதல், அன்புக்குரியவர்களை இழந்த வர்களுக்கும், காயங்கள், பயிர்களை, கால்நடைகளை இழந்த வர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மேற் குறிப்பிட்ட மறுவாழ்வு இழப்பீடு செயல்முறைகளை இப்பிராந்தியத்தை நன்கு அறிந்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவால் மேற்பார்வையிட வேண்டும். அதுவும் உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட வேண்டும் – என நான்கு முக்கியமான கோரிக் கை கள் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன.