செய்திச்சுருக்கம் தமிழில் பெயர் பலகைகளை வைக்க அறிவுறுத்தல்…

Viduthalai
1 Min Read

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங் களிலும் உள்ள கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் விதியின்படி தமிழில் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பெயர்ப் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்களுக்கு ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே போல் பள்ளிகளின் பெயர் பலகைகளையும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏ.சி. பயன்பாடு… மின் கட்டணத்தை குறைக்க எளிய வழி!

AC பயன்படுத்துவோர் 24°C வைத்தால், கட்டண அதிகரிப்பை தடுக்க முடியும் என எரிசக்தி திறன் மேம்பாட்டு அலுவலகம் கூறியுள்ளது. பலரும் தங்கள் AC-ல் 20°C 21°C வரை வைத்து பயன்படுத்துகின்றனர் 24°C-25°C வைத்தாலே அறை குளிர்ச்சியாக இருக்குமாம். நாட்டில் ஏசி பயன்படுத்து வோரில் 50% பேர், 24°C அளவை பயன்படுத் தினால் ஆண்டுக்கு 1 கோடி யூனிட் மின்சாரம் மிச்சமாவதோடு மில்லியன் டன் CO2-வை தடுக்கலாம்.

1,000 ஆண்களுக்கு
891 பெண்கள்:
கடும் பாலினச் சரிவு

2022 நிலவரப்படி பீகாரில் 1,000 ஆண்களுக்கு 891 பெண்களே உள்ளனர். இதனால் அங்கு பாலின விகிதம் சரிவைச் சந்தித்துள்ளது. 2020இல் 964, 2021இல் 908 என பெண்கள் இருந்தனர். இந்த தொடர் பாலினச் சரிவு தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறுகின்றனர். கரோனா ஊரடங்கிற்குப் பிறகே இந்த சரிவு காணப்படுவதற்கு, அம்மாநில பொருளா தாரப் பின்னடைவும். ஒரு காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *