இந்திய பகுத்தறிவாளர் கழகங்களின் கூட்டமைப்பு [FIRA] அமைப்பின் தேசிய நிருவாக குழு கூட்டம்

Viduthalai
1 Min Read

திருவனந்தபுரம், ஜூன் 10- இந்திய பகுத்தறிவாளர் கழகங்களின் கூட்டமைப்பு [FIRA] அமைப்பின் தேசிய நிருவாக குழு கூட்டம் கேரள மாநிலம், திருவனந்தபுரம், பிஎம்ஜி சந்திப்பு, மாணவர் மய்ய வளாகத்தில் 08. 06. 2025 ஞாயிறு முற்பகல் நடைபெற்றது .

FIRA தலைவர் டாக்டர் நரேந்திர நாயக், பொதுச்செயலாளர் பேரா. சுடேஷ் கோடேராவ் ஆகியோர் கலந்து கொண்டகூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி. மோகன் பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகளை எடுத்துரைத்தார்.

பிற்பகல் மைத்ரி பதிப்பகத்தின் சார்பில் ‘ சகோதரன் அய்யப்பன் மற்றும் கேரளாவில் அரசியல் நவீனமயமாக்கல்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மாலை ‘இந்தியாவில் மதச்சார்பின்மை எதிர்கொள்ளும் சவால்கள்’ என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி. மோகன் உரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *