கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
2 Min Read

9.6.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தொகுதி வரையறை குறித்து ஏன் மவுனம்? மதுரை வந்த அமித்ஷாவுக்கு திமுக கேள்வி.

* நாங்கள் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம், எடப்பாடி பழனிச்சாமி.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

*தெலங்கானா ரேவந்த் அமைச்சரவையில் மேலும் அமைச்சர்கள் சேர்ப்பு; தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த   டாக்டர் விவேக் வெங்கிடசாமி, லட்சுமண் குமார் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வகிதி சிறீஹரி ஆகிய மூவரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராம்சந்திர நாயக், சட்டப்பேரவை துணைத் தலைவராக தேர்வு.

* மெய்தி தன்னார்வக் குழுவான அரம்பை தெங்கோல் அமைப்பின் தலைவர் கானன் சிங் கைது செய்யப்பட்டதை கண்டித்து,மணிப்பூரில் மீண்டும் வன்முறை: தடை உத்தரவு பிறப்பிப்பு; வலைதளம் முடக்கம். பிரதமர் மவுனம் குறித்து காங்கிரஸ் கண்டனம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் “மேட்ச் பிக்சிங்” மற்றும் “மோசடி” என்று குற்றம் சாட்டிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு சிவசேனா (UBT) மற்றும் ஆர்.ஜே.டி. ஆதரவு. “பாஜக அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் கட்டுரைகள் எழுதலாம், ஆனால் தேர்தல்கள் மூலம் எவ்வாறு வெற்றி பெற்றனர் என்பது முழு உலகத்திற்கும் தெரியும்,” என்று சிவசேனாவின் சஞ்சய் ராவத் காட்டம்.

தி இந்து:

* பத்திரிகையாளர்களை சந்திக்க பிரதமர் மோடிக்கு ஒருபோதும் துணிச்சல் இல்லை. 2014ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்றது முதல் 11 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்.

* முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்பட்டது? தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையின் இரண்டு கட்டங்கள் என்ன? வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி ஏன் கணக்கிடப்படும்? தென் மாநிலங்களும் சில சிறிய மாநிலங்களும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை குறித்து ஏன் அச்சப்படுகின்றன? என்பதை விரிவாக விளக்குகிறார் மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி ரங்கராஜன்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

< ஊழல் வழக்கு காரணமாக நாடாளுமன்ற மழைக்கால அமர்வின் போது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கத்தை எதிர்கொள்கிறார். பதவி விலகினால் மட்டுமே அவருக்கு ஓய்வு கால பயன்கள் கிடைக்கும்.

– குடந்தை கருணா

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *