தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டு தலின்படி, திராவிடர் கழக மகளிர் பொறுப்பா ளர்கள், மகளிர் இல்லங்கள் தேடிச் சென்று அவர்களுடன் சந்தித்து உரையாடினோம்.
எளிமையான இந்த இயக்கப் பிரச்சாரம் தர்மபுரி மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
மகளிர் தோழர்களின் இல்லங்களையே அரங்கங்களாக கொண்டு எளிமையான முறை யில் நடத்தப்பட்டது.
பிரச்சாரம் முழுமையுமே மூடநம்பிக்கையிலிருந்து பெண்கள் மீண்டு வர வேண்டும் என்ற அடிப்படையிலேயே மேற்கொள்ளப் பட்டது.
கிராமப்புற மகளிர் தோழர்களும் மிகச் சிறப்பாக கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள்.
ஜே. பாளையம்
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகில் உள்ள ஜே. பாளையம் கிராமத்தில், மகளிர் பாசறை தோழர் மஞ்சு சேட்டு அவர்களின் வீட்டில் இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மகளிர் சந்திப்பில் கமலாவதி, சுகுணா, அனிதா, ஜெய கீர்த்திகா, மாதம்மாள், திவ்யபாரதி, சரவணா, சிகாமணி, முருகம்மாள், செவ்வந்தி, பிரசாந்தி, ராதா, தீத்தம்மாள், மஞ்சு, ராஜாம்பாள், சிவகாமி , செம்பருத்தி, தமிழ் அமுதம், அய்ஸ் வர்யா, உமா ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கிராமங்களில் நிலவுகின்ற, மூடநம்பிக் கைகள் குறித்து, கருத்துகளை தெரிவித்தார்கள்.
மத்தூர்
இதனைத் தொடர்ந்து, மத்தூர் அருகிலுள்ள தர்மத்தோப்பு என்ற கிராமத்தில் உள்ள நம்மு டைய மகளிரணி தோழர் முருகம்மாள் இல்லத் தில், மகளிர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மத்தூர் மகளிர் தோழர் சி முருகம்மாள் மற்றும் மத்தூர் மு இந்திரா காந்தியின் சிறப்பான ஒருங்கிணைப்பில் நிறைய மகளிர் தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு குடும்பத்தில் மாமியாரும் மருமகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மிகச் சிறப்பு. மருமகள் தோழியர் அவர்தம் மாமியார் முன்னே தாலி குறித்து அவரது கருத்தை விவா தத்தில் முன் வைத்தார்.
மகளிர் சந்திப்பில் தென்றல் நிலா, பப்பி, உமா, நந்தினி, சகுந்தலா, சத்யா, சாலினி, உண்ணாமலை, வித்யா, சவுரி, சின்னக்கண்ணு, முருகம்மாள், ஜெயா, தென்றல் விழி, நீலா, மாணிக்கம்மாள், சுலோச்சனா, சுதா, இந்துமதி, வித்யா, தென்றல் நிலா, எஸ்.சுதா ஆகியோர் மகளிர் சந்திப்பில் தங்களை இணைத்துக் கொண்டு கலந்துரை யாடினார் .
பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன் கலந்து கொண்டு மகளிர் தோழர்களுக்கு தேனீர் வழங்கினார்..
தகடூர் தமிழ்ச்செல்வி, மு,இந்திரா காந்தி இருவரும், மத்தூர் அருகில் உள்ள எகிலிரியான் கொட்டாய் தோழியர் வசந்தி முருகேசனை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
வேப்பிலைபட்டி
தொடர்ந்து தருமபுரி மாவட்டம் வேப்பி லைபட்டியில்,மகளிர் அணி தலைவர் த.முரு கம்மாள் சிறப்பான ஏற்பாட்டில் மகளிர் சந்திப்பு நடைபெற்றது.
மகளிர் தோழர்கள் முருகம்மாள், சுசிலா, சுதி, விஜயா, பங்கஜம், சுமதி, ரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மண்டல தலைவர் அ.தமிழ்ச்செல்வன் மகளிர் தோழர்களுக்கு தேநீரும் சிற்றுண்டியும் வழங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் யாழ் திலீபன் கலந்து கொண்டார்.
பந்தரவள்ளி
தொடர்ந்து 29.5.2023 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் உள்ள பந்தரவள்ளி என்ற கிராமத்தில் ,இல்லம் தேடி மகளிர் சந்திப்பு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் அணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் அணி தலைவர் மு.இந்திரா காந்தி அவர்கள் தலைமையேற்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் சி.முருகம்மாள் வரவேற்புரை ஆற்றினார்.
பந்திரவள்ளி கிராமத்தின் மகளிர் தோழர்கள் வெண்ணிலா கருணாகரன், சந்தியா தனசேகரன், சத்யா திருநாவுக்கரசு, முத்தமிழ் சக்கரை, சித்ரா, காமாட்சி அம்மையார், வசந்தி, பிரியா ஆகி யோர் மகளிர் சந்திப்பில் கலந்து கொண்டனர் .
நிகழ்வின் சிறப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ஒன்றிய கவுன்சிலர் துரை அய்யப்பன், மகளிர் தோழர்களை வரவேற்று உரையாடி, பெரியார் பிஞ்சு ஒரு ஆண்டு சந்தா ரூபாய் 600 அளித்தார்.
கிருஷ்ணகிரி பெரியார் மய்ய கட்டட வசூல் பணிகளுக்காக அந்தப் பகுதிக்கு வந்திருந்த தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் அறிவரசன் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மாணிக்கம் கிருஷ்ணகிரி மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம், தங்கராஜ், ஊற்றங்கரை பொன்முடி, சரவணன், சீனிவாசன், பாரூர் வெங்கடாசலம், திராவிட மணி , ஆகியோர் நிகழ்விற்கு வந்திருந்து மகளிர் தோழர்களை உற்சாகப்படுத்தினர்.
ஊமை.ஜெயராமன் மகளிர் தோழர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
ஊமை.ஜெயராமனின் சகோதரி காமாட்சி அவர்கள் வந்திருந்த அனைத்து தோழர்களுக் கும் தேநீர் மற்றும் சிற்றுண்டி உணவு சிறப்பாக வழங்கினார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் பாட்டாளர் சாலைப் பணியாளர் கருணாகரன், வினீத் தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு, மகளிர் தோழர்களை வாகனத்தில் அழைத்துச் சென்று வர சிறப்பான உதவி புரிந்தனர்.
கிராமப்புறங்களில் நிலவி வரும் மூட நம்பிக்கைகள் குறித்து குறிப்பாக இறப்பு வீடுகளில் சடங்குகள், சம்பிரதாயங்கள் என்ற பெயரில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்தும், பெண்கள் கல்வி பெற வேண்டியதன் அவசியத்தை குறித்தும் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வியும், கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் அணி தலைவர் இந்திரா காந்தியும் உரை யாற்றினர்.
நிகழ்வின் முடிவில் மகளிர் தோழர் வெண் ணிலா நன்றியுரை ஆற்றினார்.
29.5.2023 கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் அணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
ஒரு மிகப்பெரிய வரலாறாக ,தமிழர் தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட இருக்கும் கிருஷ்ணகிரி பெரியார் மய்ய கட்டடத் திறப்பு விழாவிற்கு, கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மகளிர் அதிக அளவில் பங்கேற்பது,
தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி தொடர்ந்து, இல்லம் தேடி மகளிர் சந்திப்பு நடத்துவது,
வாய்ப்புள்ள இடங்களில் தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்பினை ஒட்டி நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம் நடத்துவது,
மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப் பாளர்களுக்கு தமிழர் தலைவரால் அறிவிக் கப்பட்டுள்ள பெரியார் பிஞ்சு இதழ் சந்தா சேர்ப்பு பணியை மேற்கொள்வது எனவும் ,இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானிக்கப் படுகிறது.