காஞ்சிபுரம், ஜூன் 24– காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு இல்லம் அருகில், ஆளுநர் ஆர்.என். ரவியைத் திரும்பப் பெறக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கும் மாபெரும் கையெ ழுத்து இயக்கம் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் 20.6.2023 அன்று காலை 9.00 மணியளவில் தொடங்கப்பட்டது.
மதிமுக ஏற்பாடு செய்த நிகழ் வில் திராவிடர் கழகம், காங்கிரஸ், வி.சி.க, சி.பி.அய், சி.பி.அய்.எம், த.வா.க, ம.நே.ம.க உள்ளிட்ட தோழமை கட்சியினர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வளையாபதி முன் னிலை வகித்தார். திராவிடர் கழகம் சார்பில் கழகக் காப்பாளர் டிஏஜி. அசோகன், மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி, மாவட்ட செயலாளர் கி. இளையவேள், மாவட்ட இணைச் செயலாளர் ஆ. மோகன், மாநகரத் தலைவர் ச. வேலாயுதம், மாநகரச் செயலாளர் இ. இரவிந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் வீ. கோவிந்தராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைத்துக் கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராகக் கையெழுத்திட்டனர்.