‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைக் குவியல்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் சிறந்த மாநிலமாக திகழும் தமிழ்நாடு

viduthalai
4 Min Read

சென்னை, ஜூன்.9– மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செய்யப் படும் வளர்ச்சித்திட்டப் பணிகளால் தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்கிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

நகரமயமாகும் தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபின் வீட்டு வசதித் திட்டங்கள், சாலை வசதிகள், குடிநீர்த் திட்டங்கள் முதலான பல அடிப்படை வசதிகள் காரணமாக தமிழ்நாடு விரைந்து நகரமயமாகி வருகிறது. ஊராட்சிகள் பேரூராட்சிகளாவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாவும் வளர்ச்சி பெறுகின்றன.

நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி களில் இதுவரை அம்ரூத் 2.0 திட் டத்தின் கீழ் கட்டங்களில் ரூ.6 ஆயிரத்து 650 கோடி மதிப்பு 446 பாதாள சாக்கடை திட்ட பணிகள், குடிநீர்ப் பணிகள், பூங்கா மேம்பாடு மற்றும் நீர் நிலைகள் புனரமைத்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 11 மாநகராட்சிகள் ரூ.10 ஆயிரத்து 640 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பாதாள சாக்கடை

7 மாநகராட்சிகளில் மேல் நிலை குடிநீர்த்தொட்டிகள், 14 மாநக ராட்சிகளில் ரூ.3 ஆயிரத்து 360 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள், 23 மாநகராட்சிகள் மற்றும் 112 நகராட்சிகளில் விடுபட்ட பகுதிகளில் 3 லட்சத்து 65 ஆயிரத்து 555 தெருவிளக்குகள், புதிதாக 1 லட்சத்து 11 ஆயிரத்து 327 எல்.இ.டி. தெரு விளக்குகளும் ரூ.577 கோடியில் அமைக்கும் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

ரூ.194 கோடியில் 100 நூலகம் மற்றும் அறிவுசார் மய்யங்கள், மாநகராட் சிகளில் ரூ.102.30 கோடியில் 231 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. நகராட்சி மற்றும் மாநக ராட்சி பள்ளிகளில் மொத்தம் 905 வகுப்பறைகள் ரூ.132.66 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

சென்னைப் புறநகர்ப் பகுதி களில் உள்ள நகராட்சி மற்றும் மாநக ராட்சிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு 109 கி.மீ. நீளத்திற்கு ரூ.270.83 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளன.

மக்களுடன் முதல்வர் திட்டம்

24 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் மாநகராட்சிகளில் இதுவரை பெறப்பட்ட 10,283 மனுக்களில் 99.97 சதவீத மனுக்களுக்கும், நகராட்சிகளில் பெறப்பட்ட 34,385 மனுக்களில் 99.91 சதவீத மனுக்களுக்கும் தீர்வுகள் காணப்பட்டுள்ளன.

‘முதல்வரின் முகவரி’ திட்டத்தின் கீழ் மாநகராட்சிகளில் இதுவரை பெறப் பட்ட 46,241 மனுக்களில் 98.3 சதவீத மனுக்களுக்கும், நகராட்சிகளில் பெறப்பட்ட 85,464 மனுக்களில் 97.4 சதவீத மனுக்களுக்கும் தீர்வுகள் காணப்பட்டுள்ளன.

‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 4 ஆண்டுகளில் பேரூராட் சிகளில் ரூ.1,571 கோடியில் 2,937 பணிகளும் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் பேரூராட்சிகளில் ரூ.148 கோடியில் 1,287 பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ரூ.2,377 கோடியில் 5693 புதிய சாலை பணிகள், ரூ.4,673.60 கோடியில் 9358 கிலோ மீட்டர் நீள சாலை சீரமைப்பு. தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்ற 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 14,669 வீடுகள் கட்டப்படுகின்றன. அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.114.98 கோடியில் 663 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்கள், ரூ.584 கோடியில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் திட்டபணிகளையும் மற்றும் ரூ.1043 கோடியில் நிறைவேற்றப்பட்ட பாதாள சாக்கடைத்திட்ட பணிகள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளால், 40 லட்சத்து 3 ஆயிரம் மக்கள் பயன் அடைந்துள்ளனர்.

மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் அதனை சார்ந்த பணிகள் ரூ.1,517 கோடியில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் 9 லட்சம் மக்கள் பயனடைகிறார்கள்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த ரூ.431½ கோடி திட்டங்களால் 19 லட் சத்து 94 ஆயிரத்து 399 மக்கள் பயன்பெறுகின்றனர்.

முதன்மை மாநிலம்

ரூ.4,199 கோடி மதிப்பில் பல் வேறு திட்டங்களுக்கு அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கிப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ரூ.6,829 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு தொடர்பணிகள் நடைபெற்று வருகின்றன.

4 மாநகராட்சிகள், 13 நகராட்சிகள், 49 பேரூராட்சிகள், 10,565 ஊரகக் குடியிருப்புகளுக்கான 71 குடிநீர்த் திட்டங்கள் நாளொன்றுக்கு 751.56 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் ரூ.9,011.45 கோடி திட்ட மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்திட்டங்களின் மூலம் 121.37 லட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நிறை வேற்றப்பட்டு வரும் இத்தகைய மாபெரும் திட்டங்களால் தமிழ்நாடு அதிவேகமாக நகரமாயமாகி, இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக திகழ்கிறது. தி.மு.க. அரசின் மக்கள் நலத்திட்டங்கள் இதர மாநிலங்களுக்கும் வழி காட்டுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *