உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு
சென்னை, ஜூன் 24– அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண் ணப்பம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 மாணவ–மாணவிகளிடம் பெறப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங் கள் உள்ளன. இவற்றில் இதுவரை 77 ஆயிரத்து 984 இடங்கள் நிரப் பப்பட்டுள்ளன. மாணவர்கள் சேர்க்கை வரும் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அதிகளவில் வந்துள்ளன. எனவே கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கலை, அறிவியல் படிப்புகளுக்கான இடங்கள் அதி கரிக்கப்பட உள்ளன. அரசுக் கல் லூரிகளுக்கு 20 சதவீதமும், அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு 15 சதவீதமும், சுயநிதிக் கல்லூரி களுக்கு 10 சதவீதமும் கூடுதல் இடங்கள் வழங்கப்படும். வரும் ஜூலை மாதம் 3-ஆம் தேதி கல்லூரி கள் திறக்கப்பட உள்ளன. கல்லூரி கள் திறந்த பிறகும் காலியிடங்கள் இருந்தால் அந்த இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மாணவர் சேர்க்கை சமுகநீதியை பின்பற்றி நடத்தப்படுகிறது. அவர் கள் பெற்ற மதிப்பெண் பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. என பிரிவு வாரியாக வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப மாண வர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஒரு கல்லூரியில் மாணவர் பணம் செலுத்தி சேர்ந்த பிறகு, அவருக்கு விருப்பமான கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால், ஏற்கெனவே சேர்ந்த கல்லூரியில் செலுத்தி இருந்த பணத்தை அவர் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பேசினா லும் மாநில கல்விக்கொள்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக் கிறது. இன்னும் 2 மாதத்தில் மாநில கல்விக் கொள்கை குழுவின் அறிக்கை வெளியாகும். தமிழ்நாட் டில் உள்ள கல்லூரிகளுக்கு 3 ஆயி ரம் கவுரவ விரிவுரையாளர் களை நியமிப்பது குறித்த அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. திருச்சி தந்தை பெரியார் அரசு கலைக் கல்லூரியின் தன்னாட்சி அதிகாரம் காலாவதி யானதாக வந்தது தவறான தகவலா கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.