செந்துறை, ஜூன் 24 அரியலூர் மாவட்டம் செந்துறையில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு இன்று (24.6.2023) சனிக்கிழமை காலை 10 மணியளவில் செந்துறை அருணா பார்வதி திருமண மண்டபத்தில் எழுச்சியோடு தொடங்கியது. 91 மாணவர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.
மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க, மாவட்ட துணைச் செயலாளர் பொன். செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருட்டிணன், மாவட்ட காப்பாளர் சு. மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ், மாவட்ட அமைப்பாளர் இரத்தின. இராமச்சந்திரன், மாவட்ட ப.க. தலைவர் தங்க. சிவமூர்த்தி, மாவட்ட தொழிலாளரணி தலைவர் தா. மதியழகன், செயலாளர் வெ. இளவரசன், மாவட்ட இ.அ. செயலாளர் லெ. தமிழரசன், மாவட்ட மகளிரணி தலைவர் இரா. இந்திராகாந்தி, மாநில மா.அ.து. அமைப்பாளர் திராவிடச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச்செல்வன், பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா. ஜெயக்குமார் ஆகியோர் மாணவர்களை வரவேற்று தொடக்க உரையாற்றினார்கள்.
“தந்தை பெரியார் ஒரு அறிமுகம்” என்ற தலைப்பில் முனைவர் துரை. சந்திரசேகரன் “சமூகநீதி வரலாறு” என்ற தலைப்பில் பேரா. சு. அறிவுக்கரசு, “தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் சாதனைகள்” என்ற தலைப்பில் முனைவர் துரை. சந்திரசேகரன், “சமூக ஊடகங்களில் நமது பங்கு” என்ற தலைப்பில் மா. அழகிரிசாமி. வி.சி. வில்வம், “பெரியார் மீதான அவதூறுகளுக்குப் பதிலடி” என்ற தலைப் பில் வழக்குரைஞர் சு. குமாரதேவன், “கடவுள் மறுப்பு ஒரு தத்துவ விளக்கம்” என்ற தலைப்பில் முனைவர் க. அன்பழகன் ஆகியோர் வகுப்புகளை எடுத்தனர். மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் மா. சங்கர் நன்றி கூறினார்.