அடுத்து கூட்டணி தலைவர்கள் சந்திப்பு சிம்லாவில்
பாட்னா, ஜூன் 24 பீகார், பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோச னைக் கூட்டம் நிறைவு பெற்றது. பீகார் முதலமைச்சர் – மந்திரி நிதிஷ்குமார் தலை மையில் சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 16க்கும் மேற் பட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றனர்.
பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நிறைவடைந்த நிலையில் நிதிஷ்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- கூட்டம் சிறப்பாகவும், ஒற்றுமையாகவும் நடைபெற்றது.பாட்னாவில் 16 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற முதல் கூட்டம் நிறைவு பெற்றது. இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்வது குறித்து ஆலோசித்தோம். 16 கட்சிகள் இணைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம் என முடி வெடுத்துள்ளோம்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரு மனதாக ஆலோசித்து முடிவெடுத்துள் ளோம். சிம்லாவில் விரைவில் 2-ஆவது கூட்டம் நடைபெறும். பாஜகவை எப்படி எதிர்க்கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதித்தோம். பாஜக அல்லாத பெரும்பாலான மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர் என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:- கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட் டத்தில் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலை யொட்டி பொது தேர்தல் அறிக்கையை தயார் செய்வது குறித்து ஆலோசித்தோம். அடுத்த ஆலோ சனை கூட்டத்தில் பொதுத் தேர்தல் அறிக்கை குறித்து முடிவெடுப்போம்எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 10 அல்லது 12ஆம் தேதி சிம்லாவில் நடைபெறும் என்றார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா செய்தியாளர் களிடம் கூறியதாவது:- சிம்லாவில் நடக்கும் 2ஆ-வது போட்டியில் பாஜகவை வீழ்த்துவது குறித்து விரிவாக விவாதிப்போம். அமலாக்கத்துறை, சிபிஅய் முகமைகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது. பாஜக வர லாற்றை மாற்ற முனைகிறது, நாங்கள் வரலாற்றை காப்பாற்ற நினைக்கிறோம்.
எந்த விவகாரத்திலும் மாநில அரசுகளை ஒன்றிய அரசு கலந்து ஆலோசிப்பதில்லை. நாங்கள் ஒற்று மையுடன் இருக்கிறோம், ஒற்றுமையுடன் தேர்தலை சந்திப் போம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அதுதான் கடைசி பொதுத் தேர்தலாக இருக்கும். ஒன்றிய அரசிடம் எல்லா வற்றுக்குமே போராட வேண்டி உள்ளது என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கூறிய தாவது:-
நாட்டின் கட்டமைப்பை பாஜகவும், ஆர்.எஸ். எஸ்-_ம் சிதைக்கிறது. வேறுபாடுகள் இருந்தாலும் கருத்திய லுக்காக இணைந்துள்ளோம் என்றார்.
ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு கிடைத்தது போல, இந்த ஒருங்கிணைந்த முன்னணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்றார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.
“காந்தியை தூக்கி எறிந்து விட்டு கோட்சே-அய் முன்னிலைப்படுத்த முயற்சிக்கிறார்கள்” – என்றார் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி.