தாழ்த்திப் பேசவோ, துதிபாடவோ இங்கு வரவில்லை மோடியிடம் கேள்வி கேட்ட ஊடகவியலாளர் கருத்து
வாசிங்டன், ஜூன் 24 ஒன்பது ஆண்டு களுக்குப் பிறகு முதல் முதலாக ஊடகவியலா ளர்களைச் சந்தித்த மோடியிடம் மனித உரி மைகள் இந்தியாவில் பறிக்கப்படுகிறதே என்று கேள்வி கேட்ட ‘வால்ஸ்டிரீட்’ ஊடகவியலாளர் சபரினா சித்திக் பேசும் பொருளாகி உள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பிற்குச்செல்லும் முன்பு அவர் சமூகவலைதளத்தில் எழுதியது தற்போது பிரபலமாகிக்கொண்டு வருகிறது. ஆங்கிலத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியதாவது:
இந்தியப்பிரதமர் மோடியிடம் மனித உரிமைகள் பிரச்சினைகளை எழுப்புவதில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். அமெ ரிக்கா அதன் அரசியல் நோக்கில் செயல்பட லாம். ஆனால் ஊடகவியலாளர்களான எங்களின் பார்வை என்பது கேள்விகள் கேட்பதிலிருந்துதான் துவங்குகிறது.
நாங்கள் “இறையாண்மை மிக்க நீண்ட தொரு பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட வேறொரு(இந்தியா) நாட்டை தாழ்த்திப் பேசவோ அல்லது துதிபாடவோ நாங்கள் இங்கு இல்லை. அவ்வாறு செய்ய வேண்டியதன் அவசியமும் இல்லை.”
மோடியின் மனித உரிமை மீறல் இந்தியா வில் நடக்கிறது ஏன் மவுனம் சாதிக்கிறிர்கள் என்று கேள்வி கேட்டார். வால்ஸ்டிரீட் ஜெர்னல் ஊடகவியலாளர்.