சுங்கச்சாவடி மூலம் கொள்ளை தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி எண்ணிக்கை 96 ஆக உயர்த்த ஒன்றிய பிஜேபி அரசு முடிவு

1 Min Read

சென்னை, ஜூன்.8- தமிழ் நாட்டில் தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி களின் எண்ணிக் கையை 78-ல் இருந்து 96 ஆக உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

நெடுஞ்சாலை

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆணையம் நெடுஞ்சாலைகளை பராமரிப்பதுடன், சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டி களிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கும் பணியையும் செய்து வருகிறது. நாடு முழு வதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடந்த 10 ஆண்டு களில் சுமார் ரூ.26 ஆயிரம் கோடியை சுங்கக்கட்டணமாக வசூலித்துள்ளது.

இந்த சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-1-ஆம் தேதி 40 சுங்கச்சாவடிகளிலும், செப்டம்பர் 1-ஆம் தேதி 38 சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச் சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன.

அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதேநேரம், தமிழ்நாட்டில் காலாவதியாகிவிட்ட சுங்கச் சாவடிகளை மூட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு ஒன்றிய அரசுக்கு பல்வேறு முறை கடிதம் எழுதி இருந்தார்.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் 963 கிலோ மீட்டர் நீளமுள்ள 4 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவு பெறும். அத்துடன் புதிதாக அமைக்கப்படும் இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 18 சுங்கச் சாவடிகள் அமைக் கப்பட உள்ளன.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 78-இல் இருந்து 96 ஆக உயரும் என்று தேசிய நெடுஞ் சாலை ஆணைய அதிகாரிகள் கூறினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *