கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

5.6.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* திமுக புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு; சட்டப்பேரவை தேர்தல் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்பு.

* தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் சேர முந்தைய ஆண்டுகளை விட இவ்வாண்டு மாணவர்கள் அதிக ஆர்வம்; மொத்த கல்லூரி இடங்களை விட மாணவர்கள் சேர்ந்த எண்ணிக்கை அதிகம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* அசாதுதீன் ஒவைசியின் எம்.அய்.எம். கட்சியை பீகாரில் தங்களது இந்தியா கூட்டணியில் இணைக்க ஆர்.ஜே.டி. முனைப்பு.

* மகாராட்டிரா தேர்தல் வாக்கு முறைகேடு; ராகுல் குற்றச்சாட்டை தொடர்ந்து, ஜூன் 12இல் மகாராட்டிரா காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு.

* மகாராட்டிரா தேர்தலைப் போலவே பீகார் தேர்தலிலும் ‘மேட்ச் பிக்சிங்’ செய்ய பாஜக சதி: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு

* தெலங்கானா கல்லூரிகளில் சமஸ்கிருதத்தை தேர்வு மொழியாக சேர்க்க எதிர்ப்பு; எந்தக் கல்லூரியும் சமஸ் கிருதத்தை சேர்க்க மனு அனுப்பவில்லை.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* திருச்சி பச்சமலை அரசுப் பள்ளியில் பயின்று சட்ட நுழைவுத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த பழங்குடியின மாணவர் பரத்: தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் இடம். முதலமைச்சர் பாராட்டு.

தி இந்து:

* மகாராட்டிரா தேர்தல்.. வாக்குச்சாவடியின் சிசிடிவியை தாங்க: “தேர்தல் ஆணையம் ஓர் அரசியல் அமைப்பாக உள்ளது. உங்களிடம் மறைக்க எதுவும் இல்லை என்றால் எனது கட்டுரையில் உள்ள கேள்விகளுக்கு பதிலளித்து அதை நிரூபிக்கவும்” தேர்தல் ஆணையத்தை விடாமல் சீண்டும் ராகுல்.

* ஒன்றிய அரசு என்னை சிக்க வைக்க சதி: ஜம்மு காஷ்மீர் மேனாள் ஆளுநர்: சிபிஅய் தாக்கல் செய்த வழக்குகளால் தன்னை மிரட்டுவதன் மூலம் ஒன்றிய அரசு பொய்யான குற்றப்பத்திரிகையில் சிக்க வைக்க முயற்சிப்பதாக ஜம்மு-காஷ்மீர் மேனாள் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

* கோவிட்-19 தொற்று நோய் காலத்தில் உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் ஒரு மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான செய்தியை வெளியிட்டது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் (FIR) பெயர் குறிப்பிடப்பட்ட பிபிசி பத்திரிகையாளர் முகமது சிராஜ் அலிக்கு கீழமை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *