இன்று (25.6.2023) காலை 7.30 மணியளவில், வேலூர், சத்துவாச்சாரி, அலமேலுரங்காபுரத்தில் உள்ள நி.ஷி.மஹாலில் அ.மொ.வீரமணி-பொன்மொழி இல்லத்தின் வாழ்க்கை இணையேற்பு விழாவின் இணையர்கள் த.வீ.பெரியார்செல்வன்-பி.விமலா ஆகியோரின் மணவிழாவை திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையேற்று நடத்தி வைத்தார், பொதுக்குழு உறுப்பினர் கு.இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். திமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஞானசேகரன் வாழ்த்துரை வழங்கினார். கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.