திருப்பத்தூர் மாவட்ட தந்தை பெரியார் கட்டுமான தொழிலாளரணி தலைவர் வி.ஆனந்தன் 23.06.2023 அன்று மாலை 2.30 மணியளவில் இயற்கை எய்தினார். அவர்களின் இறுதி நிகழ்வு 24.06.2023 மாலை 3.00 மணியளவில் ஆதியூர் பள்ளிப்பட்டு கிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவர் சுமார் 50 ஆண்டுகள் இயக்கப் பணிகளிலும்,போராட்டங்களிலும் ஈடுபட்டு தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை இயக்கத்திற்காக அர்ப்பணித்தவர். கழக நிகழ்வுகள் அனைத்தையும் இலவசமாக தனது ஆனந்தன் – சாந்தி திருமண மண்டபத்தில் நடத்திக் கொள்ள அனுமதித்த தந்தை பெரியார் அவர்களின் கொள்கைப் பற்றாளர். ஆசிரியர் அவர்களின் அன்பை பெற்றவர். இவருடைய இழப்பு கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிலப்பாகும். அய்யா அவர்களின் இறுதி நிகழ்வில் திராவிடர் கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு வீரவணக்கமும், மரியாதையும் செலுத்தினர்.