மதுரை மாவட்டம் ஆனையூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள 15 புதிய சுகாதார மய்ய கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் 23-6-2023 அன்று திறந்து வைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சவு.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்). மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.