ஆப்கானிஸ்தான், மியான்மர், காங்கோ குடியரசு உள்ளிட்ட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார். கொலரோடாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத் துள்ளார். அதே போல், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு அதிக கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.