முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (6.6.2025) தலைமைச் செயலகத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், தேர்தல் நடத்தும் அலுவலரும், சட்டப்பேரவை கூடுதல் செயலாளருமான
பி. சுப்பிரமணியத்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உடன், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் சுமிட்டி தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, சாந்தோம் பேராலய அதிபரும், தமிழ்நாடு’ சிறுபான்மையினர் நல ஆணையத்தின் மேனாள் தலைவருமான வின்சென்ட் சின்னதுரை ஆகியோர் உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன், ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.