வாழ்த்துகள் – பாராட்டுகள்! அரசு பழங்குடியினர் பள்ளியில் பயின்ற மாணவி அய்.அய்.டி. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை! கல்விச் செலவை அரசு ஏற்கும் என முதலமைச்சர் அறிவிப்பு

Viduthalai
2 Min Read

சேலம், ஜூன் 6 அரசு பழங்குடியினர் பள்ளியில் பயின்ற மாணவி அய்.அய்.டி-க்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.  அவரது உயர்கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறை கிரா மத்தைச் சேர்ந்த ஆண்டி-கவிதா இணை யரின் 3 ஆவது மகள் ராஜேஸ்வரி. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், அங்குள்ள அரசு பழங்குடியின உறைவிட பள்ளியில் பிளஸ்-2 பயின்று, 600-க்கு 521 மதிப்பெண்  பெற்றார். பின்னர், ஆசிரியர்கள் ஊக்குவித்ததால், அரசு சார்பில் பெருந்துறையில் செயல்படும் உயர்கல்வி பயிற்சி மய்யத்தில் ராஜேஸ்வரி சேர்ந்தார்.

மருத்துவராக வேண்டுமென்ற ஆசையுடன் இருந்த ராஜேஸ்வரி நீட் தேர்வுக்கு மட்டுமின்றி, அய்.அய்.டி. சேர்க்கைக்கான ஜேஇஇ தேர்வுக்கும் தயாரானார். ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெற றதும், ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர் வுக்கு முனைப்புடன் பயின்றார். இந்நிலையில், அந்த தேர்வில் வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் பழங்குடியினருக்கான பிரிவில் 417 ஆவது இடம் பெற்றுள்ளார். மேலும், தமிழ்நாடு அளவில் பழங்குடியின மாணவிகளில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். தையல் கலைஞராகப் பணியாற்றிய ராஜேஸ்வரியின் தந்தை ஆண்டி, உடல்நலக்குறைவால் 2 ஆண்டு களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். ராஜேஸ்வரியின் தாய் கவிதாவுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

ராஜேஸ்வரியின் மூத்த சகோதரி ஜகதீஸ்வரி பி.எஸ்சி. வேதியியல், அண்ணன் சிறீகணேஷ் பி.எஸ்சி. கணிதம் பட்டம் பெற்றுள்ளனர். தங்கை பரமேஸ்வரி கருமந்துறை பழங்குடியினர் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். வறுமையில் இருந்தாலும், தந்தையும், தாயும் ஊக்குவித்ததால் குடும்பத்தில் அனைவரும் நன்றாகப் படித்ததாக ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தந்தையை இழந்தாலும், அவரின் கனவை நெஞ்சில் சுமந்து, அதை நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஸ்வரியின் சாதனைக்குப் பாராட்டுகள். அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் தமிழக அரசே ஏற்கும். ராஜேஸ்வரி போன்ற பலரும் சேருவதுதான் அய்.அய்.டி.-க்கு உண்மையான பெருமையாக அமையும். அதற்காக ‘திராவிடமாடல்’ அரசு தொடர்ந்து உழைக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *