காரைக்குடி விடுதலை வாசகர் வட்டம் நடத்திய “தமிழர் மான வாழ்வுக்கு வழிவகுத்த அறிவாயுதங்கள், குடிஅரசும் விடுதலையும்” கருத்தரங்கம்

viduthalai
3 Min Read

காரைக்குடி, ஜூன் 5- காரைக்குடியில் குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா, உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலையின் 91-ஆம்ஆண்டு பிறந்தநாள் விழா 1.6.2025 அன்று காலை 11 மணிக்கு குறளகத் தில் எழுச்சியோடு நடை பெற்றது.

மாவட்ட கழகத் தலைவர் ம.கு.வைகறை தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி வர வேற்றார். மாநகர கழக தலைவர் ந.செகதீசன், மாநில ப.க. அமைப்பாளர் ஒ. முத்துக்குமார், மாவட்ட ப.க. தலைவர் துரை. செல்வம் முடியரசன், மாநகர செயலாளர் அ. பிரவீன் முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனார்.

விடுதலையின் 91ஆவது பிறந்தநாள் விழா

கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தனது நோக்கவுரையில், விடுதலையின் 91ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பான கருத்தரங்கமாக தமிழ்நாட்டிலேயே முதல் நிகழ்வாக நடத்திய காரைக்குடி மாவட்ட பொறுப்பாளர்களை வெகு வாக பாராட்டினார்.

விடுதலைக்கு
சந்தா

நிகழ்வின் தொடக்க மாக, விடுதலை ஏட்டிற்கு 16 சந்தாக்கள் மாவட்ட கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

பெரியார் பிஞ்சுகள் சிறீநிவாஸ், ராம்நாகராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கழகப் பேச்சாளர் தி.என்னா ரெசு பிராட்லா தொடக்க வுரையில்,  விடுதலையின் 91ஆவது பிறந்த நாள் விழா காரைக்குடியில் தொடங்குகிறது என்பது பெரும் மகிழ்வாகும், தான் இளம் வயதில் மேடையில் பேசப் பழகிய நினைவுகளையும், நிகழ்வுக்கு வந்திருந்த இளம் பேச்சாளர்களை ஊக்கப் படுத்தி பேசினார்.

“பச்சை அட்டைக்
குடி அரசு’

“பச்சை அட்டைக் குடி அரசு” என்ற தலைப்பில் உரையாற்றிய மாவட்ட கழகக் காப்பாளர் சாமி.திராவிடமணி தனது உரையில், குடிஅரசு ஏட்டில் எழுதிய எழுத் தாளர்கள், பல்வேறு நாடுகளில் ஏட்டிற்கு சந் தாதாரர்கள் இருந்ததையும், தமிழ்நாட்டு வரலாற்றை புரட்டி போட்டதையும் பல்வகைசான்றுகளை புள்ளி விபரத்துடன் எடுத்துரைத்து கருத்துரை வழங்கினார்.

“விடுதலை எனும் அறிவாயுதம்

“விடுதலை எனும் அறிவாயுதம்” என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றிய கழக சொற் பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் தனதுரையில், உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வரலாற்றுச் சாதனையாக பகுத்தறிவு கருத்துகளை, சுயமரியாதை உணர்வுகளை பரப்பி வரும் ஒரே ஏடு விடுதலை தான், குடிஅரசு ஏட்டின் தொடர்ச்சியாக, விடுதலை தொடர்வதையும், அதற்குக் காரணமான கழகத் தலைவரின் ஆசிரியரின் அயராத தொண்டறப் பணிகள், விடுதலை ஏடு குறித்து பல்வேறு தலைவர்கள், அறிஞர்கள் கூறிய கருத்துகளையும், விடுதலையில் வரக்கூடிய ஒரு பெட்டிச் செய்தி ஏற்படுத்திய பல்வேறு அரசியல் சான்றுகளோடு எடுத்துரைத்தார்.

மாவட்ட துணைத்தலைவர் கொ.மணிவண்ணன் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.

‘நூற்றாண்டு கண்ட குடி அரசு ஒரு முத்துக்குளியல்’

முன்னதாக கழக புதிய வெளியீடுகள் ‘நூற்றாண்டு கண்ட குடி அரசு ஒரு முத்துக்குளியல்’ உள்ளிட்ட அய்ந்து புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டு கழக காப்பாளர் சாமி.திராவிடமணி வெளியிட மாவட்டத்தலைவர் ம.கு.வைகறை பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு.கண்மணி, மாவட்ட ப.க. ஆலோசகர் சு.முழுமதி, கல்லல் ஒன்றிய கழக செயலாளர் கொரட்டி வீ. பாலு, காளையார்கோவில் ஒன்றிய தலைவர் து.அழகர்சாமி, மாவட்ட ப.க. துணை செயலாளர் முனைவர் சே.கோபால்சாமி, தி.தொ.க. தலைவர் சி.சூரியமூர்த்தி, மு.வெங்கடேசன், தி.புருனோ என்னாரெசு, ரமேஷ் குமார், சு.ராம் குமார், சாந்தி ராம்குமார், து.அபிராமி முத்துக்குமார், முனைவர் சி.தன்மானம்,  சத்தியமூர்த்தி, பெரியார் பெருந்தொண்டர் ச.கைவல்யம், இளம் பேச்சாளர்கள் நா.நவீன், ந. முகமது கைஃப், வள்ளி மீனாள் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *