பாம்பன், ஜூன்5– இராமநாதபுரம் பாம்பனில் குடி அரசு நூற்றாண்டு நிறைவு விழா, உலகின் ஒரே பகுத்தறிவு நாளி தழ் விடுதலையின் 91-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா! திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு விழா 1.6.2025 அன்று மாலை ஆறு மணிக்கு இராம நாதபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் எழுச்சி யோடு நடைபெற்றது.
ப.க.மாவட்டதலைவர் எஸ்.பேரின்பன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார்
மாவட்ட கழக செயலாளர் எம்.முருகேசன், பாம்பன் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் எஸ்.எஸ்.சீனிவாசன், ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். பச்சை அட்டை குடிஅரசு – என்ற தலைப்பில் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் கே.எம்.சிகாமணி சிறப்பாக உரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் பங்கேற்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் ஆற்றிய தொண்டினையும், 91ஆம்ஆண்டில் தடம்பதிக்கும் விடுதலை ஏட்டால் ஒடுக்கப்பட்டோர் பெற்ற பயன்களையும் 63 ஆண்டுகளாக விடுதலையின் ஆசிரியராக தமிழர் தலைவர் ஆற்றிவரும் அரும்பணிகளையும் விளக்கி சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கயல் கணேசன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் கெவின் குமார், இராமேசுவரம் நகரத் தலைவர் ப. எட்வர்ட், செயலாளர் சி. அறிவுச்செல்வன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் எஸ். இராஜ்குமார், இராமேஸ்வரம் பூமிநாதன், தங்கச்சிமடம் எம். முஸ்தபா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.