சென்னை, ஜூன் 5– தமிழ்நாட்டில் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான ‘தமிழக அறிவியல் அறிஞர் விருது’க்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பத்தின் மாநில மன்ற உறுப்பினர் செயலர் வின்சென்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக அறிவியல்
அறிஞர் விருது
அறிஞர் விருது
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மூலம் கடந்த 1993ஆம் ஆண்டு முதல் ‘தமிழக அறிவியல் அறிஞர் விருது’ 10 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் விருது பெற தகுதியானவர்களிடம் இருந்து விண் ணப்பங்கள் பெறப்பட்டன. 2022ஆம் ஆண்டு 73 பேரும், 2023ஆம் ஆண்டு 96 பேரும் விண்ணப்பித்திருந்தனர். ஆண் டுக்கு 12 பேர் வீதம் 24 அறிவியலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
2022ஆம் ஆண்டு வேளாண்மையியல் பிரிவில் கிள்ளிகுளம் பேராசிரியர் மா.ஆறுமுகம் பிள்ளை, உயிரியல் பிரிவில் கோயம்புத்தூர் பேராசிரியர் த.பரிமேலழகன், காரைக்குடி பேராசிரியை க.பாண்டிமாதேவி, வேதியியல் பிரிவில் சென்னை பேராசிரியர் த.சங்கீதா, பொறியியல் தொழில் நுட்பவியல் பிரிவில் தரமணி அறிவியல் அறிஞர் அ.ராமச்சந்திர மூர்த்தி, சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் திருச்சி பேராசிரியர் இர.ஆர்தர் ஜேம்ஸ், கணிதவியல் பிரிவில் அண்ணாமலைபுரம் பேராசிரியர் கி.சீத்தாராமன்,மருத்துவவியல் பிரிவில் சென்னை பேராசிரியர் ப.சு.லட்சுமி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மேனாள் டீன் டாக்டர்.ஏ.தேரணி ராஜன், இயற்பியல் பிரிவில் கோயம்புத்தூர் பேராசிரியர் ரா.த.ராஜேந்திர குமார், சமூகவியல் பிரிவில் சென்னை பேராசிரியர் மா. தமிழரசன், கால்நடையியல் பிரிவில் சென்னை க.விஜயராணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
பேராசிரியர்கள் தேர்வு
அதேபோல் 2023ஆம் ஆண்டுக்கு வேளாண்மையியல் பிரிவில் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மய்ய அறிஞர் இரா. தங்கவேலு, உயிரியல் பிரிவில் வேலூர் பேராசிரியர் ரா.சிவா மற்றும் மதுரை இணைப்பேராசிரியர் வரலட்சுமி, வேதியியல் பிரிவில் சென்னை பேராசிரியர் நெப்போலியன், பொறியியல் தொழில்நுட்பவியல் பிரிவில் சென்னை பேராசிரியர் பழனி குமார், சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் சென்னை பேராசிரியர் தி.தேவசேனா, கணிதவியல் பிரிவில் கோயம்புத்தூர் பேராசிரியர் ர.சக்திவேல், மருத்துவவியல் பிரிவில் சென்னை டாக்டர் சரவணன் முத்து பாண்டியன்,
இயற்பியல் பிரிவில் சென்னை பேராசிரியர் பி. கார்த்தி, சமூகவியல் பிரிவில் சென்னை மருத்துவ கண்காணிப்பாளர் பாலமலை தின கரன், காரைக்குடி பேராசிரியர் சே.வேதிய ராஜன், கால்நடையியல் பிரிவில் ஒரத்தநாடு பேராசிரியர் சதீஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு சென்னையில் நடக்கும் விழாவில் விருதும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்