தந்தை பெரியார் ஆணைப்படி இந்திய தேசப் படத்தை நாடெங்கும் கொளுத்திய நாள் இன்று (05-06-1960)
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் 130 ஆவது பிறந்த நாள் இன்று (ஜூன் 5, 1896)
ஆட்சி மொழி தமிழே என்று அரசியல் நிர்ணய சபையில் முழங்கியவர். அண்ணாவுடன் கைகோர்த்த முதல் கூட்டணி தோழர். கேரளாவில் நின்று மூன்று முறை வென்று நாடாளுமன்றம் சென்ற தமிழர். சமூகநீதி, சமத்துவம் ஆகிய கருத்தியலை பற்றிக் கொண்டு களமாடியவர். சமய நல்லிணக்கத்தின் குறியீடு அவர்!
அன்னைத் தமிழ் மொழிக்காகவும் இஸ்லாமியச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும் மத நல்லிணக்கம் நம் தமிழ் மண்ணில் தழைத்தோங்கவும் உழைத்த கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களது 130 ஆவது பிறந்த நாளான இன்று (ஜூன் 5, 1896) அவரது புகழ் தொண்டினை நினைவுக் கூர்கிறோம்!
