திருவாரூர், ஜூன் 4– திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஜூன் 7 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற இருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கத்திற்கு திருவாரூர் – நாகை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் 1.6.2025 அன்று அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தார்.
திருவாரூர் மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், திருவாரூர் மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன், கழக காப்பாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட துணை தலைவர் கி.அருண்காந்தி, கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன், திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர்கள் மு.இளமாறன், தேவ.நர்மதா மற்றும் நாகை, திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அழைப்பிதழை பெற்றுக்கொண்டு திரளாக பங்கு பெறுவோம் என உறுதி அளித்தனர் (01-06-2025).
ஜுன் – 7 கும்பகோணத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கத்திற்கு திருவாரூர் – நாகை மாவட்டங்களில் இருந்து திரளும் தோழர்கள்!
Leave a Comment