தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி பெரியார் நினைவு சமத்துவப்புரத்தில் இந்து மதக் கோயிலா?
அனைத்து சமூக மக்களும் ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ்வதற்கான குடியிருப்பு தான் “பெரியார் நினைவு சமத்துவப்புரம்” என்கிற மாபெரும் சமூக நீதியை நிலைநாட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஏற்படுத்தினார்கள். அங்கே ஒரு இந்து மதக் கோவில் கட்டப்பட்டுள்ளதென்பது சமத்துவபுர மரபுகளுக்கு ஏற்புடையது இல்லையே! சமூக நீதியை நிலைநாட்டும் திராவிட மாடல் அரசுதான் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.