சென்னை, ஜூன் 3 சென்னையில் 1,869 இடங்களில் இலவச வைஃபை சேவை கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் இலவச வைஃபை மூலம் இணைய சேவைகளை வழங்கும் திட்டத்தை கடந்த 2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற உமாஜின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தனியார் பங்களிப்பாளர்களின் ஆதரவுடன் பல்வேறு நகர்ப்புறங்களில் எல்காட் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதற்காக இலவச வைஃபை பெறுவதற்கான கருவிகள் சென்னையில் 1,869 இடங்களிலும் ஆவடி, தாம்பரம், கோவை ஆகிய மாநகராட்சிகளில் 712 இடங்களிலும் நிறுவப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.