மேனாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த (25.6.1931) இந்த நாளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த அப்புரட்சியாள ருக்கு என் புகழ் நினைவேந்தலை செலுத்துகிறேன்.
சமூக நீதிக்கான பணியை அச்சமின்றி முன்னெடுத்து, ‘இட ஒதுக்கீடு எங்கள் உரிமை’ என அனைவரையும் ஓங்கி முழங்கச் செய்தவர்.
வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கும் இலக்கில் வி.பி.சிங்கும், தலைவர் கலைஞரும் ஒன்றி ணைந்து செயல்பட்டவர்கள். வி.பி.சிங்கின் சிந்தனைகள் மேலும் ஒளிமயமான, சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நம்மை தொடர்ந்து வழிநடத்தட்டும்.
இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.