நாகை, நவ.13- நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள் ளையர்கள் தாக்குதல் நடத்தியுள் ளனர். மேலும் கத்தி முனையில் மிரட்டி ஜிபிஎஸ் கருவி, அலை பேசிகள், மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின் றனர். அந்தவகையில் தற்போது இலங்கை கடற்கொள்ளையர் களின் அட்டுழியமும் அதிகரித் துள்ளது. மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களின் பொருட்களை கொள் ளையடிக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.
அந்த வகையில் 11.11.2023 அன்று நாகை மாவட்டம் வேதா ரண்யம் அருகே கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவரக்ள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளை யர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. நாகை மாவட்டம் வேதா ரண்யத்தை அடுத்த ஆறு காட்டுத் துறை மீனவர் கிராமத்தை சேர்ந்த நெடுஞ்செழியன், ராமகிருஷ்ணன், மதியழகன், குமாரவேல் ஆகியோர் ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான பைபர் படகில் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
கோடியக்கரைக்கு தென் கிழக்கே எட்டு நாட்டிகல் தொலைவில் மீன் பிடித்துக் கொண் டிருந்தனர். அப்போது திடீரென அடையாளம் தெரியாத 2 இலங்கை தமிழ் பேச தெரிந்த மீனவர்கள் வந்தனர். அவர்கள் 2 பேரும் தமிழ் நாடு மீனர்வர்கள் 4 பேரையும் கத்தியை காடி மிரட்டியுள்ளனர்.
பின்னர் தமிழ்நாடு மீனவர் களிடமிருந்த ஜிபிஎஸ் கருவி, அலைபேசிகள், மீன்பிடி வலை களை பறிமுதல் செய்தனர். மேலும் இனி இங்கு வரக்கூடாது என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக ராமகிருஷ்ணன் காவல் துறையில் புகார் அளித் துள்ளனர்.
ஏற்கெனவே கடந்த மாதம் இறுதியில், நாகையில் 15 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத் தக்கது. தமிழ்நாடு மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல் நடத் தும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதோடு மீனவர்களையும் தாக்கி, அவர்களிடம் இருந்து கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர் களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத் தும் தமிழ்நாடு மீனவர்கள், இந்திய கடற்படை ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி இலங்கை கடற் கொள்ளையர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.