இம்பால், ஜூன் 26 மணிப்பூரில் நடைபெறும் வன் முறைகளுக்கு பாஜக – வின் தூண்டுதலே காரணம் என்பதால், குக்கி – மெய்டெய் ஆகிய இரண்டு பிரிவினருமே அக்கட்சியின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப் பினர்களின் வீடுகள், பாஜக அலுவலகங்களுக்கு தீயிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், பொது சுகாதார பொறியியல் துறை, நுகர் வோர் மற்றும் உணவு விவ காரத் துறை அமைச்சராக இருக்கும் சுசிந்த் ரோவின் (மெய்டெய் சமூகத்தை சேர்ந்தவர்) கிழக்கு இம்பால் வீட்டை ஒரு கும்பல் தீயிட்டு கொளுத்தியுள்ளது. இதே போல அங்குள்ள பாஜக அலுவலகத்துக்கும் தீ வைத் துள்ளனர்.