அய்ந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டம் படிக்க தமிழ்நாடு அரசின் உதவித் தொகை

viduthalai
3 Min Read

சென்னை, ஜூன் 1- பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் மாதம் ரூ.2000 உதவித் தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பில் சேரலாம். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான தமிழ் முதுகலைப் பட்டம் (தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன்) மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையுடன் நடத்தப்படும் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு (P.G. MTK) சேர்க்கை நடக்க உள்ளது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் அய்ந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டம் (Five Years Integrated Post Graduate M.A. in Tamil), தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (M.A. Tamil) மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (Ph.D.) ஆகியன ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றது. 2025-2026ஆம் கல்வியாண்டில் தற்போது அய்ந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழ் முதுகலைப் பட்ட மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பெறவுள்ளது.

ரூ.2000 கல்வி உதவித்தொகை

இப்பட்ட வகுப்பில் சேர்க்கைப் பெறும் மாணவர்களுள் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.2000/- கல்வி உதவித் தொகை மாதந்தோறும் வழங்கப்படும். மேற்கண்ட படிப்பில் பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம். இருபாலருக்கான தனித்தனி கட்டணமில்லா விடுதி வசதி உள்ளது. விடுதியில் உள்ள ஒழிவிடங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் விடுதி அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப் பங்கள் இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து நேரில் (அ) அஞ்சலில் இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மய்யத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை- 600113 (தொலைபேசி 044-22542992) என்ற முகவரியில் 27.06.2025 வெள்ளிக்கிழமைக்குள் அளித்தல் வேண்டும். மேலும் தகவல்பெற மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது நிறுவன வலைத் தளத்தில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

உள்கட்டமைப்பு வசதி / மாணவர் நலன்

சிறந்த உட்கட்டமைப்புடன் கூடிய ஆய்வு நூலகம் இரு பாலருக் கான தனித்தனி கட்டணமில்லா விடுதி வசதி > பட்டியல் / பழங்குடி இனத்தவர் / பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஒன்றிய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை

இந்தக் கல்வியாண்டு முதல் அய்ந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் (15 மாணவர்கள்) பட்டப்படிப்பு பயிலும் மாணவர் களுக்குத் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை ரூ.2000/-

முதுகலைத் தமிழ் (15 மாணவர்கள்) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு விதிமுறைகளுக் குட்பட்டு கல்வி உதவித்தொகை மாதந்தோறும் ரூ.2000/-.

முனைவர் பட்டம் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுள் தெரிவின் அடிப்படையில் 8 மாணவர்களுக்குத் மாதந்தோறும் ரூ.5000/- ஆய்வு உதவித் தொகை.

ஒருங்கிணைந்த அய்ந்தாண்டு படிப்பில் பயிலும் மாணவர்கள் மூன்றாமாண்டு நிறைவு பெற்று விருப்பத்தின் அடிப்படையில் இளங்கலை பட்டத்துடன் வெளியேறும் வசதி.

பட்டப்படிப்புடன் கூடுதலாக பகுதி நேர பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் படிக்கும் வசதி

ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் நடத்தப்படும் தேசிய தகுதித்தேர்வு/மாநிலத் தகுதித் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி (NET/SET) வகுப்புகள் நடத்தப்படும்.

விதிமுறைகள்

அனைத்துப் பாடப் பிரிவு களுக்கும் பயிற்றுமொழி தமிழாகும்.

உயர்கல்வித் துறை மற்றும் பல்கலைக்கழக நல்கைக்குழு விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் – 10.+2+3 கல்விப் படிநிலைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலை / இளநிலை அறிவியல் படிப்புகளில் மொழிப் பாடமாகத் தமிழ் படித்திருக்க வேண்டும்.

இளநிலைப் படிப்பில் அய்ந்தாம் பருவத்தில் தேர்ச்சி பெற்று, ஆறாம் பருவ முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஒட்டு மொத்தத் தேர்ச்சி மதிப்பெண் பட்டியல் அளித்த பின்னரே சேர்க்கை உறுதி செய்யப்படும்.

01.07.2025 அன்று இப்படிப்பிற்கு 27 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் SC/SCA/ST/BC/BCM/MBC/DNC பிரிவினருக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வும் அளிக்கப்படும்.

மேற்கண்ட படிப்பில் மாணவர் கள் சேர்க்கை எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட பாடத்தை நடத்துவது குறித்துப் பல்கலைக் கழகம் முடிவெடுக்கும்.

சேர்க்கைப் பெறும் மாணவர் களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க நடத்தப் பெறும் சிறப்பு எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுள் அதிக அளவு மதிப்பெண் அடிப்படையில் 15 மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். சேர்க்கைக்கான மொத்த இடங்கள் 25 ஆகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *